Load Image
Advertisement

ரூ.100 கோடி நிலக்கரி மாயம்; நடவடிக்கை எடுப்பது எப்போது?

When will the Rs 100 crore coal scam take action?  ரூ.100 கோடி நிலக்கரி மாயம்; நடவடிக்கை எடுப்பது எப்போது?
ADVERTISEMENT


சென்னை-வட சென்னை மற்றும் துாத்துக்குடி அனல் மின் நிலையங்களில், 31 கோடி கிலோ நிலக்கரி மாயமான விவகாரம் குறித்து விசாரணை முடிந்தும், மின் வாரி யம் நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில், மின் வாரியத்திற்கு தலா, 210 மெகா வாட் திறனில், மூன்று அலகுகள் உடைய, வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. துாத்துக்குடியில் தலா 210 மெகா வாட் திறனில், ஐந்து அலகுகள் உடைய, அனல் மின் நிலையம் உள்ளது.

கடந்த 2021ல், வட சென்னை மின் நிலையத்தின் பதிவேட்டில் உள்ள நிலக்கரி அளவுக்கும், அங்கு இருப்பில் உள்ள நிலக்கரிக்கும், 23.80 கோடி கிலோ குறைவாக இருந்தது.

மேலும், துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில்பதிவேட்டில் உள்ள அளவை விட, இருப்பில் உள்ள நிலக்கரி, 7.20 கோடி குறைவாக இருந்தது. இதை, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் வாரிய உயரதிகாரிகள் ஆய்வு செய்து, உறுதி செய்தனர்.

மாயமான நிலக்கரியின்மதிப்பு, 100 கோடி ரூபாய். இதுதொடர்பாக விசாரணை நடத்த, மின் வாரிய இயக்குனர்கள் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு கள ஆய்வு செய்து, நிலக்கரி மாயமான விவகாரத்தை உறுதி செய்து, அறிக்கை சமர்ப்பித்தது.
Latest Tamil News
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விஜிலென்ஸ் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. நிலக்கரி மாயமானதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படஇருப்பதாக, மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நிலக்கரி மாயமானது உறுதி செய்யப்பட்டு, ஒன்றரை ஆண்டு ஆகிறது. இருப்பினும் இதுவரை அதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், மின் வாரியம் தாமதம் செய்து வருகிறது.

இது குறித்து, மின் ஊழியர்கள் கூறுகையில்,'யாரை காப்பாற்ற, நடவடிக்கை எடுக்காமல் தாமதிக்கின்றனர் எனத் தெரியவில்லை. சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இழப்பு ஏற்படுத்திய தொகையை அவர்களிடம் வசூலிக்க வேண்டும்' என்றனர்.


வாசகர் கருத்து (6)

 • DVRR - Kolkata,இந்தியா

  அந்த நிலக்கரி, மழை நீரில் கலந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டது

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  சிறந்த வழக்கறிஞரை நியமித்தால் அழகாக வெளியே வரலாம், அந்த காலங்களில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டது என்று அறிந்து, அந்த அளவுக்கு கரி பயன்படுத்தப்பட்டுவிட்டது, அவைகளை கணக்கில் காட்டாத தவறி விட்டார்கள், ஆகவே காணாமல் போன கறிக்கு இணையாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டு விட்டது என்று கணக்கு காட்டினால் போதுமே, சர்க்கரையை எறும்பு தின்றது, கோணியை எலி கடித்து விட்டது, கிழிந்து கொலையை கரையான் உண்டுவிட்டது என்று எவ்வளவு முன்னுதாரணங்கள் உள்ளன, வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்

 • c.k.sundar rao - MYSORE,இந்தியா

  People involved in the scam may be ministers own man.

 • duruvasar - indraprastham,இந்தியா

  ஹலோ, இறக்குமதி செய்த நிலக்கரியை எந்த எலியும் தூக்கிகிட்டு போய் பக்கத்து தீவுகளில் பதுக்கமுடியாது. கப்பலில் வரும் சரக்கின் அளவில் செய்யப்படும் தகுடுத்தித்தம்தான் இவைகள். உள்நாட்டு நிலக்கரி கொண்டுவரும் பணியிலிருப்பது இரண்டு ஆளும் கட்சியின் தமிழக எம் பி களின் கப்பல் கம்பெனிகள்தான் என பேசிக்கொள்கிறார்கள். அப்படியிருந்தால் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும், யார் எடுப்பார்கள்? ஏற்க்கனவே கொதித்து போய் கோபமாக பேசிக்கொண்டிருக்கிறார் .

 • Viswam - Mumbai,இந்தியா

  சர்க்கரையை எறும்பு தின்னுச்சு, கஞ்சாவை எலி தின்னுச்சு, நிலக்கரியை வாங்கினதா சொல்லி பைசாவை திராவிடம் தின்னுச்சு துன்னரதுனாலே திராவிட மாடலுக்கு டெல்லி கான்டீன்ட்லேந்து கன்யாகுமரிவரைக்கும் காண்ட்ராக்ட்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement