சர்ச்சை
தமிழக அமைச்சர்கள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி, முதல்வர் ஸ்டாலினுக்கு தலைவலியை கொடுத்து வருகின்றனர். அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செல்வதை, 'ஓசில தானே போறீங்க...' என அமைச்சர் பொன்முடி பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மனு கொடுக்க வந்தவரை, அதே மனுவால், தலையில் அடித்ததும் தன்னை சந்திக்க வந்த எம்.பி., உட்பட சிலரை நிற்க வைத்து பேசியதும் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
மூத்த அமைச்சரான நேரு, அரசு நிகழ்ச்சியில் கவுன்சிலர் ஒருவரை தலையில், ஓங்கி அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வலம் வந்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
கல்வீசிய அமைச்சர் நாசர்
ஏற்கனவே, கட்சியினரை, ஒருமையில் பேசுவதாகவும், திட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இவர்கள் வரிசையில் சேர்ந்த பால் வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூரில் நடந்த முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்ட போது, கட்சியினரை நோக்கி திட்டியதுடன், கீழே கிடந்த கல்லை எடுத்து வீசி அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கினார்.
தொண்டர்களை அடித்த அமைச்சர் நேரு
நேற்று முன்தினம்(ஜன.,26) சேலம் வந்த, தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி க்கு தலைவாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டம் அதிகமான நிலையில், 'டென்ஷன்' ஆன அமைச்சர் நேரு, சிவப்பு நிற தொப்பி அணிந்து வந்த தொண்டர் உட்பட மூவரை கையால் அடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. தி.மு.க., அமைச்சர்களின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கையை வெட்டுவேன்
சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தி.க., சார்பில் மாநாடு நடந்தது. வீரமணியும் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் திமுக எம்.பி.,டி.ஆர்.பாலு பேசியதாவது: சேது சமுத்திர திட்டத்தை தடுத்தவர்கள் நன்றாகவே இருக்க மாட்டார்கள். வீரமணியை எவனாவது சீண்டுனா நான் சும்மா இருக்க முடியுமா? அவருக்கு திருப்பி அடிக்க முடியாது.
எனக்கு பலம் இருக்கு திருப்பி அடிப்பேன். என்னுடைய கட்சி தலைவர சீண்டினால், கட்சி தலைவர் கிட்ட வந்தால், எவனாவது ஒருத்தன், வீரமணி மேல கைய வைக்க வந்தால், அவன் கையை வெட்டுவேன்.
இது என்னுடைய தர்மம். அவன் கையை வெட்டுவது எனது நியாயம். நியாயம் இல்லைனு நீங்க சொல்லலாம். அத அப்புறம் சொல்லுங்க. கோர்ட்டுல போய் சொல்லுங்க. ஆனா வெட்டிடுவேன். இவ்வாறு டி.ஆர். பாலு பேசினார்.
அவர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (85)
நாள் எழுதப்பட்டுவிட்டது
நாங்கள் அக்மார்க் ரௌடிகள்.
படிப்பறிவு இருந்தா ஆக்கப்பூர்வமான சிந்தனையும் பேச்சும் இருக்கும் .. எதுவுமே இல்லாத இந்த மண்ணுமுட்டி கூட்டத்துக்கிட்டே இதைப்போன்ற பேச்சுக்களும் செயல்களும் தான் இருக்கும்.. இவங்க கையிலே நாட்டைக்கொடுத்து தமிழ்நாடு உறுப்பட...
அப்பா காலத்திலிருந்து பழம்திண்றுகோட்டைபோட்ட சீனியர்களை அப்படி அடக்கிவிட முடியுமா? இந்தப்பேச்சுகள் DMK யின் ஸ்டாண்டர்ட் தானே கவர்னரையே அவன் இவன் என்று பேசும் தலை யாரை என்ன கேட்கும், கண்டிக்கும் என்று எதிர்பார்க்க முடியும்?
பாராளுமன்ற உறுப்பினர் ஒரு ரௌடியை போல் கையை வெட்டுவேன் என்றும் கோவிலை இடித்தேன் என்றும் கூறுவது அவர் வகிக்கும் பதவியை கேவல படுத்துகிறது.கட்சி தலைமையும் போலீசும் கண்டுகொள்ளாமல் இருப்பதை நீதிமன்றம் கருத்தில்கொள்ளவேண்டும்.இவரைபோன்றவர்களுக்கு ஓட்டளித்த மக்களுக்கு வெட்கக்கேடு.