விபத்துக்குள்ளான ஒரு விமானம் ம.பி.,யின் மொரேனாவில் நொறுங்கியதாகவும், மற்றொரு விமானம் ராஜஸ்தானின் பாரத்பூர் பகுதியில் உள்ள வனப்பகுதி அருகே விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் கூறுகின்றன.
விமானப்படை விசாரணை
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. இந்த இரு போர் விமானங்களும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதா அல்லது வேறு காரணங்களினால் விபத்து நடந்ததா என விசாரணை நடத்தப்பட உள்ளது.
ராஜ்நாத்திடம் விளக்கம்
போர் விமானங்கள் விபத்து தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், இந்திய விமானப்படை தளபதி விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
ரஷ்ய தயாரிப்பான சுகோய் -30 ரக போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் அதிகம் உள்ளது. 272 விமானங்கள் உள்ளன. இந்த விமானங்களின் உதிரி பாகங்கள், ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்டு, பெங்களூருவில் உள்ள எச்ஏஎல் நிறுவனத்தில் பொருத்தப்பட்டு விமானம் இயக்கப்படுகிறது..
பிரான்ஸ் தயாரிப்பான மிராஜ் ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் 1986க்கு பிறகு இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. கார்கில் போர் முதல் 2019 ல் பாகிஸ்தானின் பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்த விமானங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கார்கில் போரின் போது, டைகர் ஹில்டாப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ முகாம்களுக்கும் பதுங்கு குழிகளுக்கும் மிராஜ் விமானங்கள் பலத்த சேதத்தை ஏற்படுத்தி இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளம் இட்டன.
ராஜஸ்தானிலும் விபத்து
அதேபோல், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியது. முதல் கட்ட விசாரணையில் இந்த விமானம், இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் எனவும், அடர்ந்த பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.
அக்னி பாத் சிப்பாய் தான். போர் விமானங்கள் இயக்க முடியாது