Load Image
Advertisement

பிபிசி ஆவணப் படம் திரையிட முயற்சி: டில்லி பல்கலை மாணவர்கள் 24 பேர் கைது

புதுடில்லி: டில்லி பல்கலையில் பிபிசி ஆவணப் படம் திரையிட முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து 24 மாணவர்களை போலீசார் கைது செய்தனர் .
Latest Tamil News

குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் குறித்து, பி.பி.சி., தொலைக்காட்சி, ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் கருத்துகள் சர்ச்சைகளை ஏற்படுத்துவதால், அந்த படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட, மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஆனாலும், பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆவணப்படம், பல இடங்களில் திரையிடப்படுகிறது.

இந்நிலையில் டில்லி பல்கலையில் சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப் படம் திரையிட முயற்சி செய்ததால் 24 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். தடையை மீறி படத்தை திரையிட முயன்ற ஜேஎன்யு பல்கலை மற்றும் ஜாமியா பல்கலைமாணவர்களும் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், பிரச்னை ஏற்படாத வகையில் டில்லி பல்கலை வளாகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
Latest Tamil News
இந்நிலையில், சென்னை பல்கலையில், குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை திரையிட, மாணவர்கள் திட்டமிட்டனர்.

அந்த படத்தை பல்கலை வளாகத்தில் திரையிட, துணைவேந்தர் கவுரி தடை விதித்தார். இதையடுத்து நேற்று, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஆனால், பல்கலையின் தடையை மீறி, இந்திய மாணவர் சங்க மாநில செயலர் நிருபன் தலைமையிலான மாணவர்கள், பல்கலை வளாகத்தில் லேப்டாப், மொபைல் போன் ஆகியவை வழியாக, ஆவணப்படத்தை மாணவர்கள் பார்க்கும்படி ஏற்பாடு செய்தனர்.
இதனால், பரபரப்பு ஏற்பட்டது.


வாசகர் கருத்து (32)

  • Mohan - Salem,இந்தியா

    கேவலமான செயல்களில் ஈடுபடும் BBC ஒன்றும் இன்றைய காலகட்டத்தில் தலைசிறந்த ஊடகம் அல்ல. இவர்கள் உண்மையில் நேர்மையான ஊடகம் அல்ல

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    இத்தாலி காரனின் thiruttuth

  • RAMESH - chennai,இந்தியா

    பிபிசி நாடு முழுக்க தடை செய்யப்படவேண்டும் . அதோட சேர்த்து suntv யையும் தடை செய்யணும் .

  • Mohan - Salem,இந்தியா

    பாருங்க யாரு என்ன லட்சணம்னு. அது சரி உச்ச நீதி மன்ற தீர்ப்பை அவமதிக்கிற நீங்க எதை மதிப்பீங்க...

  • r ravichandran - chennai,இந்தியா

    இந்த பிபிசி விடியோ எடுக்க முழு செலவு தொகை , காங்கிரஸ் கட்சிதான் செலவிட்டுள்ளது என்பது ஊர் அறிந்த உண்மை. இதற்கு பல நாடுகள் உடந்தை ஆக இருக்க வேண்டும், அமெரிக்கா, கனடா, சில ஐரோப்பிய நாடுகள், சில பத்திரிக்கைகள் கார்டியன், டைம்ஸ், ஒயர் போன்ற ஊடகங்கள் , இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இதை பரப்பும் வேலையை செய்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up