Load Image
Advertisement

அறநிலையத் துறையால் தான் கோவில்களை பாதுகாக்க முடியும் அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

Tamil News
ADVERTISEMENT
கோவை:''அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொண்ட சட்டப்படி உருவாக்கப்பட்ட ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் தான் கோவில்கள் பாதுகாப்புடன் இயங்கும்,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கோவையில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

பழநி பாலதண்டாயுத சுவாமி கும்பாபிஷேகம், 16 ஆண்டுகளுக்கு பின் விமரிசையாக நடத்தப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 444 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

இன்று மட்டும், 31 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் பிப்., 24 வரை, 179 கோவில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம், 100 கோடி ரூபாய் அரசு மானியத்தில், 1,000 ஆண்டுகளுக்கு மேலான, 104 கோவில்களில் குடமுழுக்கு பணிகள் நடந்து வருகின்றன.

கிராமப்புறங்களில் உள்ள, 12 ஆயிரத்து, 500 ஒரு கால பூஜை நடக்கும் கோவில்களின் வைப்பு நிதி, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். அங்கு பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும்.

பழநியில் நடந்த கும்பாபிஷேக விழாவில், 108 ஓதுவார்களை வைத்து தமிழில் அர்ச்சனை நடத்தப்பட்டது.

தமிழ் மந்திரங்கள் ஓத நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிஉள்ளது.

கோவில்களில் தமிழில் குட முழுக்கு நடத்த ஆன்மிக பெரியவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

கோவில்களுக்கு சொந்தமான, 3,964 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1 லட்சம் ஏக்கர் மீட்கப்பட்டு, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. கோவில்களில், 29 யானைகள் உள்ளன; 26 கோவில்களில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டு, யானைகளுக்கு மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

போதிய வசதிகள் செய்துள்ளதால், புத்துணர்வு முகாம் தேவையற்றதாக உள்ளது. மன்னர் காலம் முதல் தற்போது வரை, மக்களின் வரிப்பணத்தில் தான் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கோவில்கள் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் தான் இயங்க வேண்டும்.

அப்போது தான் கட்டுப்பாடு இருக்கும். விலை மதிக்க முடியாத சொத்துக்கள், கலை பொக்கிஷங்களை பாதுகாக்க அறநிலையத்துறையால் மட்டுமே முடியும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.


வாசகர் கருத்து (3)

  • Mohan - Salem,இந்தியா

    ஐயா, தமிழ் நாட்டில் இருக்கும் 34000 கோவில்கள் பெரும்பாலானவை மன்னர்களால் கட்டப்பட்டவை. கடவுளை நம்பும் மக்களின் உழைப்பால் வந்தன. மக்களின் வரிப்பணம் என கொச்சைப் படுத்த வேண்டாம். ஆலயங்களின் நிலங்களை அபகரித்தவர்கள், ஆலயங்களின் வருவாயில் ஏ.சி காரிலும் ஏசி ஆபிஸிலும் உட்கார்ந்து கொண்டு கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் பிற மதத்தினரின் நலனுக்காகவும் ஏற்படுத்தும் அரசின் திட்டங்களுக்கு செலவு செய்து கடவுள் சிலைகளை அலங்கரிக்க, ஏன்.. துடைக்கக் கூட வஸ்திரங்களை ஏற்பாடு செய்யாத அறநிலையத் துறையில் கடவுள் நம்பிக்கையற்றவர்களை வைத்துக்கொண்டு.. அமைச்சரே... கடவுள் நம்பிக்கை உள்ள நீங்கள் பார்த்து பேசவும். முதலில் அறநிலையத்துறையில் உள்ள கருங்காலிகளையும், ஏமாற்று வேலை செய்யும் நாத்திகர்களையும் அகற்றவும். கடவுள் நம்பிக்கை பிரமாணம் எடுக்கும். ஹிந்துக்கள் மட்டும் அறநிலைய துறையில் இருக்க வேண்டும். செய்வீர்களா?

  • Oru Indiyan - Chennai,இந்தியா

    இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாட்டில் 1 சனவரி 1960 முதல் செயல்பட்டு வருகிறது. அதற்கு முன்பு கோயில்கள் எப்படி நிர்வகிக்க பட்டது?

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Absolutely No .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement