Load Image
Advertisement

இன்னும் எத்தனை காலம் ஏமாற்றுவரோ?

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:...

எஸ்.ராமசுப்ரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
Latest Tamil News

தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகள்வீரவணக்க நாள் பொதுக் கூட்டம், திருவள்ளூரில், 'கல்லெறி' புகழ், அமைச்சர் நாசர் தலைமையில் நடந்தது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதில், தி.மு.க., உறுதியாக உள்ளது' என்று கூறியுள்ளார்.

உண்மையில் ஹிந்தி மொழியானது, முதல்வரின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளி உட்பட, கழக கல்வித் தந்தையர் நடத்தும் பள்ளிகளில் தான் போதிக்கப்படுகிறதே தவிர, அரசு பள்ளிகளிலோ, சென்னை மாநகராட்சி நடத்தும் பள்ளிகளிலோ போதிக்கப்படுவதில்லை.

ஆனாலும், ஹிந்திக்கு எதிரான கழகத் தலைவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி, போராட்டம் நடத்திய, ௧௨ பேர், தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளனர். அந்த, ௧௨ பேரில் ஒருவர், சிவகங்கை கல்லுாரி மாணவர் ராஜேந்திரன்; மற்றொருவர், பள்ளி ஆசிரியர். இருவருக்கும் ஹிந்தி மொழியால் பாதிப்பு இருந்திருக்கலாம்; ஆனால், மீதி உயிரிழந்த, ௧௦ பேரும் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள்.

ஹிந்திக்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களின் நினைவாக, ஆண்டுதோறும் ஜனவரி ௨௫ல், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை, தி.மு.க., அனுசரித்து வருகிறது. அத்துடன், ௧௨ பேரில் ஒரு சிலர் பெயர்களை, அரசு கட்டடங்களுக்கும், பாலங்களுக்கும் சூட்டி பெருமை அடைந்துள்ளது, தி.மு.க., அரசு.

'நீட்' தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்த, அனிதா குடும்பத்திற்கு லட்சக்கணக்கில் நிதியுதவி அளித்தது போல, ஹிந்திக்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு, காலணா கூட நிதியுதவி வழங்கப்படவில்லை; இத்தனைக்கும் அவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்!

அத்துடன், அந்த குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகள் யாருக்கும், கட்சியிலோ, அரசிலோ எந்தப் பதவியும் வழங்கப்படவும் இல்லை. இறந்தவர்களுக்காக ஆண்டுக்கு ஒரு நாள், 'வீர வணக்கம்! வீர வணக்கம்!' என்று மேடையேறி முழங்கி, பின் அமைதியாகி விடுவர், கழக ஆட்சியாளர்கள். இதனால், உயிரிழந்தவர்களின் ஆத்மாவோ, குடும்பமோ திருப்தி அடைந்து விடுமா?

சென்னை மேயர் பதவி, ஜாதி சுழற்சி முறையில் பிராமணர்களுக்கு வருகிறது என்று தெரிந்ததும், கழக உடன்பிறப்புகளில் ஒருவராக இருந்து, இயற்கையாக உயிரை விட்ட ஜெயராமனின் மனைவி காமாட்சியை, அவசர அவசரமாக மேயராக நியமிக்க முடிந்த கழகத்திற்கு, மொழிப் போர் தியாகிகளின் குடும்பத்தினரை, ஏதாவது ஒரு பதவியில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டுமென்று தோன்றவே இல்லை.
Latest Tamil News
அன்பில் தர்மலிங்கம், பொன்முடி, துரைமுருகன், மறைந்த தங்க பாண்டியன் உட்பட பலரின் வாரிசுகள், தி.மு.க.,வில் பதவி பெற்றுள்ளனர். அவர்கள், ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி இருக்கின்றனரா... என்ன தியாகம் செய்திருக்கின்றனர் என்று கேள்வி எழுப்பினால், கழகத்தினர் யாராலும் பதில் சொல்ல முடியாது.

இப்படி, 'புருடா' விட்டும், புளுகியும், தகிடுதத்தம் செய்தும், இன்னும் எத்தனை காலம் ஏமாற்றுவரோ, தி.மு.க.,வினர்!


வாசகர் கருத்து (38)

  • DVRR - Kolkata,இந்தியா

    பணம் பணம் பணம் கொடு என்ன என்ன என்ன வேண்டுமானாலும் ரெடி ஜாதியாக ஒரு வோட்டுக்கு ரூ 2000 வாங்கும் டாஸ்மாக் நாட்டு திராவிட மக்கள் இருக்கும் வரை இன்னும் எவ்வளவோ காலம் இந்த திருட்டு திராவிடம் ஏமாற்றிக்கொன்டே தான் இருக்கும் இது நிச்சயம்.

  • S SRINIVASAN -

    DRAMA DRAMA DMK MODEALL ARE FOR VOTESDRAMA, IPPADI VOTE POTITU IPPO KASHTA PADARANGA DRAMA DMK

  • rameshkumar natarajan - kochi,இந்தியா

    Many of tamils got profeciency in english and got many prominent positions because of theitr language skills in english. By saying that, you learn Hindi, what these people want is to take away the edge we have on english proficency. Those people cannt learn English, so they want us to learn Hindi.

  • Karthikeyan K Y - Chennai,இந்தியா

    சாராயம் வேண்டும் என்று குடிக்கிறவன் குடிப்பான் புகையிலை வேண்டும் என்பவன் தான் புகைப்பன் அதுபோல் ஹிந்தி வேண்டும் என்பவன் கற்கட்டும் மொழியில் அரசுக்கு என்ன வேலை, அரசின் மொழி தமிழாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் வாதிகள் ஏன் மொழியை பற்றி, மதத்தை பற்றி, ஜாதியை பற்றி பேச வேண்டும்.

  • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

    அந்த நேரத்தில் அந்த பக்கம் போனவன் வந்தவன் அப்பாவிகளை பலி கொடுத்து அதற்கு மொழிப்போர் தியாகிகள் என்று பெயர் வைத்தானுங்க ...இன்னும் எத்தனை வருடம் மொழிப்போர் மொழிப்போர் என்று ஊளையிட்டு கொண்டே இருப்பார்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்