Load Image
Advertisement

சிவிங்கி புலி இறக்குமதி செய்ய இந்தியா - தென் ஆப்ரிக்கா ஒப்பந்தம்

புதுடில்லி,-தென் ஆப்ரிக்காவில் இருந்து சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய, மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. முதல்கட்டமாக அடுத்த மாதம் 15ம் தேதி, 12 சிவிங்கி புலிகள் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Latest Tamil News

அதிகப்படியாக வேட்டையாடப்பட்டது மற்றும் வாழ்விடங்கள் அழிக்கப்பட்ட காரணங்களால், இந்தியாவில், சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

நாட்டின் கடைசி சிவிங்கி புலி 1947ல், இப்போதைய சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோரியா மாவட்டத்தில் உயிரிழந்தது. இதன் பின், இது இந்தியாவில் அழிந்துவிட்ட உயிரினமாக 1952ல் அறிவிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பொறுப்பேற்றவுடன், சிவிங்கி புலி இனத்தை நம் நாட்டில் மீண்டும் அதிகரிக்க செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

முதல்கட்டமாக, தென்மேற்கு ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கி புலிகள் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு விமானம் வாயிலாக அழைத்து வரப்பட்டன.

இவை, பிரதமர் மோடியின் 72வது பிறந்த நாள் அன்று, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் திறந்து விடப்பட்டன. இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் இருந்து சிவிங்கி புலிகளை இறக்குமதி செய்ய, அந்நாட்டு அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.
Latest Tamil News
இதன்படி, 12 சிவிங்கி புலிகள் அடுத்த மாதம் 15ல் இந்தியா வருகின்றன.

இவை, குனோ தேசிய பூங்காவுக்கு அளிக்கப்பட உள்ளன. இது போல அடுத்த 10 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 12 சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தென் ஆப்ரிக்க சுற்றுச்சூழல் துறை தெரிவித்தது.

ஆனால், இது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.


வாசகர் கருத்து (6)

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    இந்தியாவில் அழியும் நிலையில் விலங்குகள் எவ்வளவு உள்ளது .தேசிய பறவை மயில் விஷம் வைத்து கொல்கிறார்கள் .அதற்க்கு தீர்வு இல்லை .

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    என்னமோ பெருசா கடத்துறானுங்கன்னு மட்டும் நல்லா தெரியுது.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    இதனால் இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சினை உடனே நீங்கும் உலகவங்கி சர்டிபிகேட் மற்றும் மெடல் கொடுத்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்