Load Image
Advertisement

சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேக்கம்; மக்கள் பாதிப்பு

Tamil News
ADVERTISEMENT

கழிவுநீர் தேக்கம்



கொடிங்கியம், ஊராட்சி வல்லக்குண்டாபுரம் பிரிவு, காந்திநகர் பகுதியில் கடந்த ஆண்டு கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயில், கழிவுநீர் செல்லாமல் தேங்கிக்கிடக்கிறது. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை ஊராட்சி நிர்வாகத்தினர் சரிசெய்ய வேண்டும்.

- பொதுமக்கள், கொடிங்கியம்.

சுரங்கப்பாதையில் கழிவுநீர்



உடுமலை அருகே, ராகல்பாவி சுரங்கப்பாதையில், பக்கத்து தோட்டங்களிலிருந்து கழிவுநீர் வந்து சேகரமாகி தேங்கி நிற்கிறது. இதில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, இத்தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.

- கார்த்திக், ராகல்பாவி.

போலீசார் கவனத்துக்கு



உடுமலை, கொழுமம் ரோடு பிரிவு அருகில், வாகனம் திரும்பும் இடத்தில் பேனர் வைத்துள்ளதால், வாகனங்கள் வருவது தெரிவதில்லை. இதனால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சதீஸ்குமார், உடுமலை.

வாகனங்கள் நிறுத்தம்



உடுமலை, தாராபுரம் ரோட்டிலிருந்து பிரியும் 100 அடி ரோட்டில், வாகனங்கள் நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இதனால், அந்த ரோட்டில் வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முருகவேல், உடுமலை.

பிளாஸ்டிக் கழிவால் பாதிப்பு



உடுமலை, அனுஷம் தியேட்டர் ரோட்டில், மதுக்கடை முன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. அவ்வழியாக செல்லும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இவற்றை நகராட்சி சுகாதாரத்துறையினர் அகற்ற வேண்டும்.

- கண்ணன், உடுமலை.

ரோடு மோசம்



உடுமலை, தளி ரோடு மேம்பாலம் சுரங்கப்பாதையில் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகனங்களில் செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த பாதையை சீரமைக்க வேண்டும்.

- கந்தசாமி, உடுமலை.

நிழற்கூரை வேண்டும்



உடுமலை, யூனியன் ஆபீஸ் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லை. இதனால், பயணியர் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்து பஸ் ஏற வேண்டியதுள்ளது. எனவே, நகராட்சியினர் அங்கு நிழற்கூரை அமைக்க வேண்டும்.

- முருகன், உடுமலை.

குப்பை மலை



உடுமலை, கொழுமம் ரோடு, அமுதராணி பஸ் ஸ்டாப் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில், துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கு குப்பை கொட்டுவதை ஊராட்சியினர் தடுக்க வேண்டும்.

- சிவராஜ், உடுமலை.

செயல்படாத சிக்னல்



உடுமலை, பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள போக்குவரத்து சிக்னல் செயல்படுவதில்லை. இதனால், வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அந்த சிக்னல்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுரேஷ், உடுமலை.

விபத்து அபாயம்



உடுமலை, பழநி ரோட்டில், ஐஸ்வர்யா நகர் சந்திப்பில், வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. இதனால், அந்த ரோட்டை மக்களால் கடக்க முடியவில்லை. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வேகமாக வரும் வாகனங்களின் வேகத்தை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சக்தி, உடுமலை.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement