Load Image
Advertisement

டவுட் தனபாலு

Tamil News
ADVERTISEMENT

அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், 111 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுஉள்ளது. அவர்களில், 51 பேர் முன்னாள் அமைச்சர்கள். இவர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளித்து, தேர்தலில் பெரிய அளவிலான வெற்றியை பெற்றுத்தர வேண்டும்.

டவுட் தனபாலு: 'இந்த படை போதுமா... இன்னும் கொஞ்சம்வேணுமா'ன்னு நீங்க அறிவிச்சிருக்கிற தேர்தல் பணிக்குழு பட்டியலை பார்க்கிறப்ப, உங்களுக்கு எதிரா தேர்தல் களத்துல மல்லுக்கட்ட தயாராகி வரும் உங்க பங்காளி பன்னீருக்கு, 'கிலி'யை ஏற்படுத்துறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!

lll

பத்திரிகை செய்தி: சுதந்திர தின விழா மற்றும் பொங்கல் பண்டிகையின் போது, கவர்னர்அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின், குடியரசு தின விழாவை முன்னிட்டு நடந்த கவர்னரின் தேநீர் விருந்தில் பங்கேற்றார்.

டவுட் தனபாலு: கவர்னர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முந்திக்கிட்டு அறிவிச்சதுடன், கவர்னரோடு, ஆளுங்கட்சிக்கு இணக்கமான சூழல் ஏற்படாம இருக்க, முதல்வருக்கு கொம்பு சீவி விட்ட தி.மு.க., கூட்டணி கட்சியினர் இப்ப, 'பல்பு' வாங்கிட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல்: 2023 - 24ம் நிதியாண்டில் இருந்து, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். சத்தீஸ்கர் கட்டட மற்றும் கட்டுமான பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்று உள்ள தொழிலாளர்களுக்கு சொந்த வீடு கட்ட அரசு சார்பில்,50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும்.

டவுட் தனபாலு: சத்தீஸ்கர் மாநிலத்துல, இந்த வருஷக் கடைசியில சட்டசபை தேர்தல்நடக்க இருக்குது.... அங்க, மீண்டும் ஆட்சியை பிடிக்கும்முனைப்புல, எங்க ஊரு திராவிட கட்சிகளை மிஞ்சும் அளவுக்கு, இப்படி வாக்குறுதிகளை அள்ளி வீசுறீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll


வாசகர் கருத்து (2)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    மத்தளத்தை இரண்டுபக்கமும் ஒரு சேர தட்டினால் தான் ரசிக்க. முடியும். அதுபோல் கவர்னரும் முதல்வரும் இணைந்து செயயல்பட்டால் தான் அரசை செவ்வனே நடத்தமுடியும். மொத்ததில் நகமும் தசையும் போலிருக்கணும்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கூட்டணிக்கட்சிகளுக்கென்ன ? அவர்கள் பாட்டுக்கு பேசிவிட்டுப் போய்விடுவார்கள் கவர்னர் மேலிடத்தில் என்னென்ன போட்டுக் கொடுத்து பதவிக்கு, ஆட்சிக்கு ஆப்பு வைப்பாரோ என்ற பயம்தான் தேநீர் விருந்துக்குப் போகவைத்துக் குடியரசு விழாவில் சுமுகமாக நடந்துகொள்ள வைத்தது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement