Load Image
Advertisement

உலக பணக்காரர்கள் பட்டியல்: 7வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்த அதானியின், நிறுவன பங்குகள் வீழ்ச்சியடைந்தது. இதனால், அவர் உலகப்பணக்காரர்கள் பட்டியலில் 7 வது இடத்திற்கு பின்தங்கினார்.

அதானி நிறுவன பங்குகள் மிகப்பெரிய உயர்வை சந்தித்த போது அதானி, உலகப்பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தார். பிறகு மிக நீண்ட காலம் 3வது இடத்தில் இருந்தார். இச்சூழ்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பாக் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில்,
அதானி குழும நிறுவனங்கள், சந்தையை தவறாக கையாண்டுள்ளதாகவும், கணக்குகளில் மோசடிகள் இருப்பதாகவும் கூறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதானி நிறுவனம், அடுத்த கட்டமாக சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறியுள்ளது.

Latest Tamil News

இதனால், பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகளின் மதிப்பு கடந்த புதன் கிழமை முதல் வீழ்ச்சியடைந்து வருகிறது.. இன்றும்(ஜன.,27) பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கியதும், அதானியின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களாக குறைந்தது. இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 7 வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார். தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸசுக்கு (104 பில்லியன் டாலர்கள்) அடுத்த இடத்தில் அதானி உள்ளார்.


வாசகர் கருத்து (9)

  • Ram - Dindigul,இந்தியா

    3.4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஆனது நம்ம பொது மக்களின் பணம் தான் ... அதானியின் பணம் அல்ல ஒரு டிகிரி கூட படிக்காத அதானி எப்படி மூன்று ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் (8 லட்சம் கோடி ரூபாய் ) சம்பாரிக்க முடியும்? குஜராத் போர்ட்டில் இறங்கிய 3 டன் கஞ்சா/ஹெரோயின் என்ன ஆயிற்று? அந்த பணம் வருடம் உள்ளது? இந்தியா அரசாங்க சொத்துக்களை (எல்லாம் மக்களின் சொத்து) அதானி க்கு கொடுத்துவிட்டு ஒரு பைசா கூட அதானியிடம் ஏன் வாங்க வில்லை? வங்கிகள் இந்த அதானிக்கு 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் எப்படி கொடுத்தது? வங்கியில் இருக்கும் பணம் எல்லாமே மக்களின் பணம்

  • Sridhar - Chennai,இந்தியா

    அதானி அமெரிக்க கம்பெனியும் ஒப்பந்தம் போட்டு, இந்தியாவில் பிஜேபி அல்லாத கட்சிகாரரிடம் ஒப்பந்தம் போட்டால் அதானி பங்குகள் மீண்டும் உயர்ந்து விடும். மதம் மாற்றம் செய்பவர்களுக்கும் பல கோடிகள் வரலாம்.

  • A.Gomathinayagam - chennai,இந்தியா

    சந்தை மதிப்பை வைத்து தான் பணக்கார வரிசை தீர்மானிக்க படுவதால் ,அந்த நிறுவனத்தின் பங்கு விலைகள் சரிய சரிய தர வரிசை குறைவதால் வியப்பு இல்லை .காற்றடைத்த பலூன் மாதிரி

  • Narayanan Muthu - chennai,இந்தியா

    கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்த மொள்ளமாரித்தனம் வெளிவந்ததால் வந்த வினையாமே இது. செபி இன்னா தூங்கிகினு இருக்குதா

  • venugopal s -

    அடடா,இந்த செய்தியை கேட்டால் அதானியை விட நம்ம ஜீ தான் அதிகமாக வருத்தப் படுவாரே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement