Load Image
Advertisement

சரக்கு, சிகரெட், சிக்கன் ‛டேஞ்சர்: ரஜினி ‛அட்வைஸ்

Drinks, cigarette, non-vegetarian Danger : Rajini Advice   சரக்கு, சிகரெட், சிக்கன் ‛டேஞ்சர்: ரஜினி ‛அட்வைஸ்
ADVERTISEMENT
சென்னை : மது, சிகரெட், அசைவம் மூன்றையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆபத்து. இவற்றில் இருந்து என்னை விடுவித்து அன்பால் நல்வழிபடுத்தியவர் என் மனைவி லதா தான் என நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

சென்னையில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் 'சாருகேசி' நாடகத்தின் 50வது நாள் விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். விழாவில் ரஜினி பேசியதாவது :

73 வயதிலும் நான் இப்போது ஆரோக்கியமாக இருக்க காரணம் என் மனைவி தான். கெட்ட நண்பர்கள், கெட்ட பழக்க வழக்கம் என்று இருந்தேன். நான் கண்டக்டர் ஆக இருந்தபோது இரண்டு வேளையும் நான் வெஜ் தான். மிட்நைட்டில் தண்ணி போடுவது, சிகரெட் எத்தனை பாக்கெட் போகும் என்றே தெரியாது.
கண்டக்டர் ஆக இருந்தபோதே அப்படி இருந்தேன் என்றால் பெயர் புகழ் வரும் போது எப்படி இருந்து இருப்பேன். காலையிலேயே பாயா, ஆப்பம், சிக்கன் 65. சைவத்தைப் பார்த்தால் பாவமாய் இருக்கும். நானே பல பேரிடம் இதை எப்படி சாப்பிடுகிறீர்கள் என்று சொல்லியிருக்கிறேன்.

Latest Tamil News

மது, சிகரெட், நான் வெஜ் இவை மூன்றும் மோசமானவை. இந்த மூன்றையும் நீண்ட காலமாக அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டவர்கள் எனக்கு தெரிந்து 60 வயதை கடந்து வாழ்வதே இல்லை. இதற்கு நிறைய பேரை உதாரணமாக சொல்லலாம். அதை என் வாயால் சொல்ல விரும்பவில்லை. அப்படி இருந்த என்னை அன்பாலேயே மாற்றியவர் என் மனைவி லதா.

இதுமாதிரியான பழக்கத்தை உடையவர்கள் உடனடியாக விட்டுவிட முடியாது. இருப்பினும் அன்பால் என்னை அவர் மாற்றினார். உரிய மருத்துவர்களை அழைத்து வந்து அறிவுரை கொடுத்தார். இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு ரஜினி கூறினார்.


வாசகர் கருத்து (28)

  • DARMHAR/ D.M.Reddy - Los Angeles,யூ.எஸ்.ஏ

    IPPOTHU THAAN

  • zakir hassan - doha,கத்தார்

    தலைவரை குறை நம் யாருக்கும் தகுதி இல்லை பெரிய மனது வேண்டும் தன தவறுகளை பொது வெளியில் ஒப்புதல் அளிக்க

  • zakir hassan - doha,கத்தார்

    தலைவா இத்தனை திரைபடங்களில் செய்யத புத்திமதிகளில் இதுதான் மிக சிறந்தது நீங்கள் நூறாண்டை கடந்து வாழ வாழ்த்தி இயற்கை அன்னையை வணங்குகிறேன்

  • MP.K - Tamil Nadu,இந்தியா

    இளமையில் ஆட்டம் முதுமையில் அறிவுரையா ?

  • சண்முகம் -

    நல்ல அறிவுறை தான். இருந்தாலும் நல்லா ஆட்டம் போட்டுட்டு வருடத்தில் ஒரு மாதம் வெளிநாட்டு மருத்துவத்தில் உடம்பை ரிப்பேர் பண்ணிகிட்டு வந்து ஊருக்கு உபதேசம் பண்ணாதீங்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்