Load Image
Advertisement

இலவச குடிநீர் இயந்திரங்களை வழங்குகிறார் கமல்!

Kamal provides free drinking water machines!   இலவச குடிநீர் இயந்திரங்களை வழங்குகிறார் கமல்!
ADVERTISEMENT

''இலவச குடிநீர் இயந்திரங்களை வழங்க இருக்காருங்க...'' என, அடுத்த மேட்டருக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்து குடிநீர் தொட்டியில, மனிதக்கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துச்சே...

''மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், தன் கட்சியின் மாநில நிர்வாகிகளை உண்மை கண்டறியும்குழுவா, அங்க அனுப்பி வச்சாருங்க...

''அந்தக் குழுவினரும், கிராம மக்களிடம் விசாரணை நடத்தி, அதுல கிடைச்ச தகவல்கள் அடிப்படையில, சில கோரிக்கைகளை மனுவா எழுதி, கலெக்டர் கவிதா ராமுவிடம் குடுத்திருக்காங்க...
Latest Tamil News
''அதோட, பாதிக்கப்பட்ட வேங்கை வயல் கிராம மக்களுக்கு, காற்றுல இருந்து குடிநீர் தயாரித்து வழங்கும் இயந்திரங்களை இலவசமா வழங்கவும் முடிவு பண்ணி, அதுக்கான அனுமதியையும் கலெக்டரிடம் கேட்டிருக்காங்க...

''அனுமதி கிடைச்சதும்,அந்த இயந்திரங்களை கமலே அங்க போய் வழங்க இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.


வாசகர் கருத்து (5)

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    தண்ணீரை சுத்தம் செய்யும் இயந்திரங்கள் வாங்கி கொடுத்தால் போதும் .அதுவே பெரிய உதவியாக இருக்கும் .

  • Sathiya Moorthy - Salem,இந்தியா

    காற்றிலிருந்து நீர் எடுப்பது என்பது தோல்வி அடைந்த திட்டம் என்பதை விட தடுக்கப்பட்ட ஒரு திட்டமாகும். காற்றினிலே ஈரப்பதம் இருக்க வேண்டும். அதை உறிஞ்சி எடுத்துவிட்டால் அந்த இடமே வெப்பமாகும். செடி கொடிகள் தாவரங்கள் அழியும். அப்படி அழிந்தால் காற்றில் ஈரப்பதம் மிகவும் குறையும். அப்படியே காற்றில் இருந்து நீர் எடுப்பதாக இருந்தாலும் அதன் அளவு மிக குறைவே, இவரின் அறிவை போல. உனக்கென்னப்பா நீ பைத்தியம். என்ன வேணாலும் சொல்லலாம் னு தான் சொல்ல தோணுது.

  • பேசும் தமிழன் -

    ஒரு விளம்பரம் ....நீ வாங்குற அஞ்சு...பத்து ...பிச்சைக்கு ...இது தேவையா ??? நீ யாருன்னு மக்களுக்கு தெரியும்.....மக்கள் அனைவருக்கும் எப்படி என்று உனக்கும் தெரியும் ....நீ என்ன தான் நாடகம் போட்டாலும் ...உனக்கு ஓட்டு கண்டிப்பாக கிடைக்காது.

  • Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    காற்றுளே நிறைய கதை விடும் பழக்கம் இந்த ஆளுக்கு உண்டு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement