Load Image
Advertisement

தி.மு.க.,வின் பகல் வேஷம் கலைகிறது

DMKs Daylight Disappearance    தி.மு.க.,வின் பகல் வேஷம் கலைகிறது
ADVERTISEMENT
சென்னை: 'பெயரளவுக்கு சமூக நீதி பேசி, நடைமுறையில் அதை காற்றில் பறக்கவிடும் தி.மு.க.,வின் பகல் வேஷம், தொடர்ந்து கலைந்து வருகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:



அதிகார போதையில், ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளிய தி.மு.க., ஆட்சியில், பட்டியலின ஊராட்சி தலைவர்களான சகோதர, சகோதரிகளை, தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுக்கும் அவலம் அடிக்கடி நடக்கிறது. அவர்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் திருப்புக்குழி ஊராட்சி தலைவர் சுகுணா தேவேந்திரனை, தி.மு.க., நிர்வாகி ஒருவர் துாண்டுதலில், குடியரசு தினத்திற்கு தேசியக்கொடி ஏற்ற விடாமல் தடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரையும் கொடியேற்ற விடாமல் தடுத்து, தமிழக பா.ஜ., தலையிட்டதால் கொடியேற்ற அனுமதித்தனர்.
Latest Tamil News இதுபோன்ற பல சம்பவங்கள் தமிழகம் முழுதும் நடக்கின்றன. பெயரளவுக்கு சமூக நீதி பேசி, நடைமுறையில் அதை காற்றில் பறக்கவிடும் தி.மு.க.,வின் பகல் வேஷம் தொடர்ந்து கலைந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் கிராமத்தில், பட்டியல் இன மக்களுக்கு எதிரான சம்பவத்தில், தி.மு.க., அரசு, குற்றவாளிகளை இன்னும் கைது செய்யாமல், வேடிக்கை பார்த்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க, இன்னும் எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

தொடரும் பட்டியல் இன மக்களுக்கு எதிரான குற்றங்களை, கண்டும் காணாமல் இருக்கும் முதல்வர் ஸ்டாலினின் மவுனம், அவலத்தின் உச்சம். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து (10)

  • DARMHAR/ D.M.Reddy - Los Angeles,யூ.எஸ்.ஏ

    தி மு க என்பது திருடர்கள் முன்னேற்ற கழகம் என்று சிலர் கூறுவதுண்டு.

  • krishna -

    IDHU PATHI ELLAM NAMMA THIRUTTU THIYAMUKKA NADHAS THAVIL OTTUNN8 KURUMA VAAYE THIRAKKA MAATAAR.ADHU SARI AVARUKKE UKKARA UDAINDHA PLASTIC CHAIR THIYAMUKKA KODUKKIRAARGAL.

  • duruvasar - indraprastham,இந்தியா

    திமுகவின் இந்த இரட்டை வேஷம் என்பது அவர்களுடைய டி என் எ வில் உள்ள அம்சம் . திமுக தோன்றிய வரலாறை படித்தாலே இது புரியும் . திமுகவும் இரட்டை வேஷமும் ஒட்டி பிறநத இரட்டை குழந்தைகள் . பொதுவாகவே திமுகவினருக்கு ஒன்றுக்கு மேற்பட்டதில்தான் எப்பொழுதும் நாட்டம் இருக்கும் .

  • Rowdy Maadal - Erode,கோமோரஸ்

    Katril parappadhu teemka ministargalin kovanamum thaan. Yaarukkum vetkamillai?

  • GMM - KA,இந்தியா

    சாதி பிரச்சனையில் பிஜேபி நுழைய வேண்டாம். பிஜேபி ஆண்டாலும், அண்ணா திமுக ஆண்டாலும் இருக்கும்? உள்ளுர் பிரச்சனை. புரிவது கடினம். 10.5 வன்னிய உள் இட ஒதுக்கீடு எடப்பாடி தோல்விக்கு முக்கிய காரணம்? ( பொது போட்டியில் வன்னியருக்கு இடம். ) தீண்டாமை சட்டம், தனி இட ஒதுக்கீடு நீங்கினால், படிப்படியாக பல குழப்பம் தீரும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்