Load Image
Advertisement

அ.தி.மு.க.,வில் யாருக்கு தமிழக பா.ஜ., ஆதரவு?

Tamil News
ADVERTISEMENT
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பதில், பா.ஜ., தாமதம் செய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு, பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் 31-ல் துவங்குகிறது.

தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க.,வில் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். இரு தரப்பும் பா.ஜ.,விடம் ஆதரவு கேட்டுள்ளன.

அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி தரப்புக்கு ஆதரவளிக்க, பா.ஜ, முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை சூசகமாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆனாலும், முடிவை அறிவிப்பதில் பா.ஜ., தாமதம் செய்து வருவது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
Latest Tamil News
இது தொடர்பாக, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: இடைத்தேர்தலில் த.மா.கா., வேட்பாளரை, தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க, பா.ஜ., மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.

இந்த இடைத்தேர்தலை, தங்கள் பலத்தை நிரூபிக்கும் களமாக பழனிசாமி நினைக்கிறார். போட்டியிடுவதில் உறுதியாக உள்ள அவர், அதற்கான வேலைகளை துவங்கி விட்டார்.

அதனால் தாமும் போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்கு பன்னீர்செல்வம் தள்ளப்பட்டுள்ளார். அ.தி.மு.க., பிளவுபட்டு இருந்தாலும் பழனிசாமி தரப்பிடம் தான் அதிக நிர்வாகிகள் உள்ளனர். எனவே, அவருக்கு ஆதரவளிக்கலாம் என, பா.ஜ., தலைவர்களில் ஒரு பிரிவினர் கூறுகின்றனர்.

இரு தரப்பில் யாரை ஆதரித்தாலும், லோக்சபா தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தும் என, பா.ஜ., மேலிடம் நினைக்கிறது. அதனால், பா.ஜ.,வை ஆதரித்து வரும் பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில், தமிழக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் தான் தாமதம். ஆனாலும், ஓரிரு நாளில் இடைத்தேர்தல் நிலைப்பாட்டை, அண்ணாமலை அறிவிப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து (18)

  • KUMAR - NELLAI,இந்தியா

    உண்மையாகவே அதிமுக ஓன்றுபட வேண்டும் என்று பிஜேபி நினைத்தால் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியை ஆதரிக்க வேண்டும். ஓ.பி.எஸ் மட்டும் பிஜேபி க்கு போவார் மற்ற அனைவரும் அதிமுகவில் ஐக்கியம் ஆகிவிடுவார்கள். ஓ பி எஸ் ஒரு பெரிய சக்தியாக பிஜேபி நினைப்பது தவறு. அவர் ஒரு 0(ஸீரோ) பன்னீர் செல்வம். காயத்திரி ரகுராமை பிஜேபியில் சேர்க்கவேண்டும் என்று எடப்பாடி சொன்னால் பிஜேபி ஏற்றுக்கொள்ளுமா. அதுபோல அது அவர்கள் உட்கட்சி பிரச்சினை. ஓ.பி.எஸ் நேரடியாக பிஜேபி அலுவலகத்திற்கு செல்கிறார், எடப்பாடி இரண்டாம் கட்ட தலைவர்களை அனுப்பி வைக்கிறார். இதிலிருந்தே புரிந்துகொள்ள வேண்டாமா எது கட்சி எது பிரிவு என்று. பிஜேபி க்கான காலம் வருகிற பாராளுமன்ற தேர்தல் என்றால் அதில் கூட்டணி அதிமுகவுடன் என்பது உறுதி என்றால் அதிமுகவை ஆதரிப்பதில்லை என்ன தாமதம். இந்த விஷயத்தில் பிஜேபியும் காங்கிரசும் வேறு வேறு அல்ல.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    பன்னீர் இப்போது வெறும் வெந்நீர், அதனால் அவர் வடிக்கும் கண்ணீர். பாஜகவின் ஆதரவு எடப்பாடியின் உண்மையான அதிமுகவுக்கே.

  • venugopal s -

    பாஜக ஆதரித்தால் மட்டும் என்ன அதிமுக ஜெயிக்கப் போகிறார்களா? கூட நாலு ஓட்டு அதிகமாக கிடைத்தால் பெரிய விஷயம்!

  • Narayanan - chennai,இந்தியா

    ஈரோட்டு மக்களை வதைக்காதீர்கள் .

  • Bala - chennai,இந்தியா

    என்னைக்கேட்டால் அதிமுக இரு அணிகளும் சேரா விட்டால் பாஜக போட்டியிடவேண்டும். இரு தேசிய கட்சிகளும் தமிழகத்தில் நேரடியாக மோதுவது ஆர்வமுடன் மக்கள் வாக்களிக்க ஏதுவாகும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்