Load Image
Advertisement

விழுப்புரத்தில் குடியரசு தினவிழா கோலாகலம்: ரூ.1.18 கோடி நலத்திட்ட உதவி வழங்கல்

Republic Day Gala at Villupuram: Rs.1.18 Crore welfare assistance provided    விழுப்புரத்தில் குடியரசு தினவிழா   கோலாகலம்: ரூ.1.18 கோடி நலத்திட்ட உதவி வழங்கல்
ADVERTISEMENT
விழுப்புரம்-குடியரசு தினவிழாவையொட்டி, விழுப்புரத்தில் கலெக்டர் மோகன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். விழாவில் ரூ.1.18 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்வழங்கப்பட்டது.

74வது குடியரசு தினவிழா விழுப்புரத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் நடந்த விழாவில், காலை 8:05 மணிக்கு கலெக்டர் மோகன் தேசியக்கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார். பிறகு அமைதி, ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் வண்ண பலுான்கள் மற்றும் வெண் புறாக்களை பறக்கவிட்டார்.

தொடர்ந்து, எஸ்.பி., ஸ்ரீநாதாவுடன் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் காவலர்கள், மாணவர்கள், ஊர்காவல் படை அணியினரின் அணி வகுப்பு நடந்தது. பிறகு சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் 24 பேருக்கு, சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 69 காவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் முதல்வர் பதக்கமும் வழங்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் சிறந்து பணியாற்றிய 356 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனையடுத்து பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் 181 பேருக்கு, ரூ.1 கோடியே 18 லட்சத்து 94 ஆயிரத்து 483 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 4 பேருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

விழாவில் எம்.எல். ஏ.,க்கள் புகழேந்தி, லட்சு மணன், சிவக்குமார், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா, கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், டி.ஐ.ஜி., பாண்டியன், எஸ்.பி., ஸ்ரீநாதா, சப் கலெக்டர் கட்டா ரவி தேஜா, மாவட்ட வன அதிகாரி சுமேஷ்சோமன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் யசோதாதேவி, சி.இ.ஒ., கிருஷ்ணபிரியா, டி.ஆர்.ஒ., பரமேஸ்வரி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement