ADVERTISEMENT
தமிழக கவர்னர் ரவி: ஜனநாயக நடைமுறைகளின் ஆணி வேராக இருக்கும் தேர்தல் மற்றும் வாக்காளர்களின் ஓட்டுப்பதிவு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். தமிழகத்தில், 70 சதவீதமாக உள்ள ஓட்டுப்பதிவு, 90 சதவீதம் என்ற நிலையை எட்ட வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக, நம் மாநிலத்தின் ஓட்டுப்பதிவு இருக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்ய, அனைவரும் பொறுப்புணர்வுடன் ஓட்டளிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்ல, வாக்காளர்களை கழகங்கள் கவனிக்கிற கவனிப்புல,கவர்னரின் வேண்டுகோளான,90 சதவீதம் என்ன, 100 சதவீதம் கூட ஓட்டுப்பதிவு ஆனாலும், 'டவுட்'டுக்கு இடமில்லாம ஏத்துக்கணும்!
பத்திரிகை செய்தி: 2021ல் வெளியான, புஷ்பா படம் பாணியில், ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில்நுாதன முறையில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
டவுட் தனபாலு: இப்ப வர்ற சினிமாக்கள் எல்லாம், பேங்க்ல எப்படி கொள்ளை அடிக்கிறது, கஞ்சாவை எப்படி கமுக்கமா கடத்துறது என, சமூக விரோத செயல்களைத் தான், கற்று தருகின்றன... இன்றைய திரையுலகினர், கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டாலே, நாட்டில் பாதி குற்றங்கள் குறையும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: முதல்வர் ஸ்டாலின் பொதுக்கூட்ட பணிகளை, பால்வளத்துறை அமைச்சர் நாசர் பார்வையிட சென்றுள்ளார். அப்போது, நாற்காலிகள் போடாததால் ஆத்திரம் அடைந்து, தான் அமைச்சர் என்பதையும் மறந்து, ரவுடி போல கல் வீச்சில் ஈடுபட்டு உள்ளார்; அவரது செயல் கண்டிக்கத்தக்கது.
டவுட் தனபாலு: அமைச்சரின் செயலை யாருமே நியாயப்படுத்த முடியாது... அதே நேரம், முதல்வர் பதவியை அலங்கரித்த உங்களது தலைமையில, குண்டர்கள் அ.தி.மு.க., தலைமை அலுவலக கதவை காலால் எட்டி உதைச்சு, சூறையாடிய சம்பவமும், 'டவுட்' இல்லாம தண்டிக்கப்பட வேண்டியது தான்!

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
Recently a lad has made 'solo' performance to rob a bank which ended in a comedy Reason is they take every shot shown seriously and forgot it is only a story