ADVERTISEMENT
நடந்தது. கீழே விழுந்தால், தானே எழுந்தது. ஓடியது. குதித்தது, தாவியது. ஏன், அந்தர் பல்டி கூட அடித்தது. பாட்டுக் கேற்ப ஆடியது. பெட்டியை துாக்கி அலமாரியில் அடுக்கியது.
பாஸ்டன் டைனமிக்ஸின் விஞ்ஞானிகள் உருவாக்கிய 'அட்லஸ்' என்கிற மனித வடிவ ரோபோ, மனிதன் சாதாரணமாகச் செய்யும் வேலைகளை, கடந்த 14 ஆண்டுகளாக மெல்லக் கற்றுக்கொண்டு வருகிறது.
அறிவியல் உலகில் அது எது செய்தாலும் செய்தியாகி, இணையத்தில் அதன் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இபபோது, அட்லசின் படைப்பாளிகள், அதை உருப்படியான வேலைகளைச் செய்ய வைப்பதில் முனைப்பாக உள்ளனர்.
இப்பது ஒரு கட்டிடம் கட்டும்பகுதியில், ஒரு பலகையை எடுத்து, இடைவெளி உள்ள இடத்தில் வைத்து, அதன் மேல் நடந்து போய், கையில் உள்ள பை ஒன்றை, மேலே உள்ள மனிதருக்கு வீசுகிறது அட்லஸ். வழக்கம்போல முப்பரிமாண கேமிராக்கள், மென் பொருள் நிரல்கள் போன்றவைதான் அவற்றை இயக்குகின்றன.
என்றாலும், பொருட்களைக் கையாள்வது, இடையூறுகளை கடந்து விழாமல் நடப்பது, போன்றவற்றை அட்லஸ் லாவகமாகச் செய்வதைப் பார்பதே தனி அழகுதான். அதாவது, இனி மனித எஜமானர்களுக்கு எடுபிடி வேலைகளைச் செய்ய அட்லஸ் ரோபோ தயாராகிவிட்டது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!