மக்களிடம் நிதி திரட்டி மோசடி: திரிணமுல் காங்., பிரமுகர் கைது
ஆமதாபாத்: பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி மோசடி செய்த வழக்கில் திரிணமுல் காங். செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலேவை பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது.
குஜராத்தைச் சேர்ந்தவர் சாகேத் கோகலே. இவர் திரிணமுல் காங். கட்சியின் செய்தி தொடர்பாளர். 'நமது ஜனநாயகம்' என்ற பெயரில் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி இதை தன் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 1700 பேரிடம் 70 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டியதாக இவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் டிச. 30ல் சாகேத் கோகலே கைது செய்யப்பட்டார். ஆமதாபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்தது. போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் நேற்று அமலாக்கத்துறையினர் பணப்பரிமாற்ற மோசடி வழக்கு பதிவு செய்தனர். இதில் கோகலே நேற்று கைது செய்யப்பட்டார். இவரை அமலாக்கத்துறையினர் நேற்று ஆமதாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் ஜன., 31 வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!