இந்திரஜித், விஜய்சங்கர் அரை சதம்
சென்னை: சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் பாபா இந்திரஜித், விஜய் சங்கர் அரை சதம் கடக்க தமிழக அணி முதல் இன்னிங்சில் 324 ரன்கள் எடுத்தது.
இந்தியாவில் ரஞ்சி கோப்பை தொடரின் 88வது சீசன் நடக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் 'பி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், தமிழக அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. பாபா இந்திரஜித் (45), விஜய் சங்கர் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் விஜய் சங்கர் (53) அரை சதம் கடந்தார். கேப்டன் ரவிந்திர ஜடேஜா 'சுழலில்' இந்திரஜித் (66) சிக்கினார். ஷாருக் கான் (50) அரை சதம் எட்டினார். அஜித் ராம் (9), மணிமாறன் (3) உள்ளிட்ட பின்வரிசை வீரர்கள் ஏமாற்றினர். தமிழக அணி முதல் இன்னிங்சில் 324 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சவுராஷ்டிரா அணி சார்பில் தர்மேந்திராசின் 3, ரவிந்திர ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சவுராஷ்டிரா அணியின் ஹர்விக் தேசாய் (21), ஜெய் கோஹில் (25) விரைவில் திரும்பினர். சந்தீப் வாரியர் பந்துவீச்சில் ஷெல்டன் ஜாக்சன் (19) அவுட்டானார். இரண்டாவது நாள் ஆட்ட முடிவில், சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்து, 232 ரன்கள் பின்தங்கி இருந்தது. சிராக் (14), சேட்டன் சுக்ரியா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!