ரேஷன் பொருட்கள் நாளை தடையின்றி தர நடவடிக்கை
சென்னை: ரேஷன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளதை அடுத்து, நாளை தடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும்படி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
உணவு வழங்கல் துறை ஆணையர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு, அவர் அனுப்பிய கடிதம்: அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 27ம் தேதி மாவட்ட தலைநகரங்களிலும், சென்னையில் உள்ள உணவு வழங்கல் துறை ஆணையர் அலுவலகம் முன்பும், ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!