ADVERTISEMENT
புதுடில்லி : நாட்டின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லி கர்த்வயா பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்.
இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லி கர்த்வயா பாதையில் நடந்த குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றினார். இந்நிகழ்வின்போது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பதா அல் சிசி, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்க வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, அப்தெல் பதா அல் சிசியை பிரதமர் மோடி வரவேற்றார். பிறகு, ராணுவ தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
வாசகர் கருத்து (3)
ஜனாதிபதி கொடியேற்றினார் ..அதே போல் குடியரசு தின கொடியை தருமையாதீன குருமணிகள் பாதயாத்திரையில் இன்று பேரளத்தில் ஏற்றி தேசப் பற்றை நிலைநிறுத்தினார்கள் .
அருமை. வந்தே மாதரம்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பாராட்டுக்கள் , இன்னமும் நான்கு முறை இது போன்று ஏற்றுவார், பிறகு ஓய்வு பெறுவார், வாழ்த்துக்கள், வந்தே மாதரம்