மாவட்ட செயலர்களுடன் ராமதாஸ் ஆலோசனை
திண்டிவனம்: திண்டிவனம் அருகே தைலாபுரத்தில், லோக்சபா தேர்தலில் பா.ம.க.,வின் நிலைப்பாடு குறித்து, மாவட்ட செயலர்களுடன், கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள பா.ம.க., அரசியல் பயிலரங்க வளாகத்தில், மாவட்ட செயலர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கட்சி தலைவர் அன்புமணி கூட்டத்தை துவக்கிவைத்து பேசினார்.
கூட்டத்தில், தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் கட்சியை வளர்க்கும் வகையில், கட்சி கொடியேற்றி, கிளைகள் அமைப்பது, மாவட்ட செயலர்கள் தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்வது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. லோக்சபா தேர்தலில் பா.ம.க.,வின் நிலைப்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சி தலைவர் அன்புமணி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தொடர்ந்து, மூன்று நாட்கள் கட்சி கொடி ஏற்றி வைக்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது என, கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!