20,000 மெகா வாட் சூரியசக்தி மின் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
சென்னை: தமிழகத்தில், 20 ஆயிரம் மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் திட்டங்கள் அமைப்பதற்கான தொழில்நுட்ப விபரங்கள் இடம் பெற்றுள்ள ஆய்வு அறிக்கையை, ஒப்பந்த நிறுவனம், மின் வாரியத்திடம் சமர்ப்பித்து உள்ளது.
தமிழகத்தில், சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேல் மின்சாரம் கிடைக்கும் சாதகமான வானிலை நிலவுகிறது. இதனால், பல நிறுவனங்களும், அந்த மின் நிலையத்தை அமைத்து வருகின்றன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது. இருப்பினும், சூரியசக்தி மின்சாரத்தை பொறுத்தவரை, 1 மெகா வாட் மின்நிலையம் கூட, மின் வாரியத்திற்கு சொந்தம் இல்லை.
எனவே, அடுத்த 10 ஆண்டுகளில், 20 ஆயிரம் மெகா வாட் திறனில் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. அதில், 10 ஆயிரம் மெகா வாட் பேட்டரியில், மின்சாரத்தை சேமிக்கும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. இதனால், அந்த மின்சாரத்தை சேமித்து, எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
முதல் கட்டமாக, 4,000 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இதில், 2,000 மெகா வாட்சேமிக்கப்படும். இதற்கானஅறிவிப்பை, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டசபையில், 2021ல் வெளியிட்டார். சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதில், பல நவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ளன.
எனவே, எந்த தொழில்நுட்பத்தில் அமைத்தால் செலவு குறைவு; எந்த இடங்களில் அமைக்கலாம் என்பன போன்றவற்றை ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கும் பணியை மின் வாரியம், 2022 ஜூனில் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் வழங்கியது. அந்நிறுவனம், ஆய்வு அறிக்கையை தற்போது மின் வாரியத்திடம் சமர்ப்பித்து உள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள தொழில்நுட்பங்களின் அடிப்படையில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள், விரைந்து மேற்கொள்ளப்படும்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!