Load Image
Advertisement

இந்தியா தலைமையிலான ஜி - 20 உலகப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும்: குடியரசு தலைவர் உரையில் ஜனாதிபதி நம்பிக்கை

புதுடில்லி: ''பருவநிலை மாறுபாடு, புவி வெப்பமடைதல் போன்ற பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களே. இந்தியா தலைமையிலான 'ஜி - ௨௦' அமைப்பு கூட்டங்களில், இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.

நாட்டின் ௭௪வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களிடையே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உரையாற்றினார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின் ஆற்றிய முதல் குடியரசு தின விழா உரையில் அவர் கூறியுள்ளதாவது:
கடந்த சில ஆண்டுகளில் அரசு நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும் மாற்றங்கள் மற்றும் மக்களின் முழு சக்தியை பயன்படுத்தி கொண்டதால், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெரும் மரியாதை கிடைத்து வருகிறது.

பல்வேறு உலக அமைப்புகளில் நம்முடைய பங்களிப்பு, நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகளும், பொறுப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், ஜி - ௨௦ எனப்படும் உலகின் பெரும் பொருளாதார நாடுகள் அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. மிகச் சிறப்பான எதிர்காலம், சிறந்த உலகை உருவாக்குவதற்கான இந்த வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது, நம்அனைவருக்கும் பெருமை தரும் விஷயமாகும்.

தற்போது உலகம் சந்தித்து வரும் மிகப் பெரும் பிரச்னைகளில் முதன்மையானது புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாறுபாடு ஆகும். இதனால் பருவம் தவறிய மழை, பெரும் வெள்ளம், கடுமையான வெப்பம் என, பல சுற்றுச்சூழல் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மக்களே. இந்தியா தலைமையிலான ஜி - ௨௦ கூட்டங்களில், இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement