ஜி.எஸ்.டி., சுங்க அதிகாரிகள் 29 பேருக்கு ஜனாதிபதி விருது
சென்னை: குடியரசு தின விழா கொண்டாட்டத்தில்,மத்திய மறைமுக வரிகள் வாரியத்தில் சிறப்பாக செயல்பட்ட, 29 பேருக்கு, ஜனாதிபதி விருது இன்று வழங்கப்படுகிறது.
அச்சுறுத்தல்களை கடந்து, துணிவுடன் பணியாற்றும், மத்திய மறைமுக வரிகள் வாரிய அதிகாரிகள், பணியாளர்களின் சேவையை கவுரவிக்கும் வகையில், ஆண்டு தோறும்ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, நடப்புஆண்டுக்கான விருதுகளுக்கு, வருவாய் துறையின் மத்திய முறைமுக வாரியத்தின், 29 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இதில், சென்னை மண்டல வருவாய் புலனாய்வு துறை இயக்குனரகத்தின் மூத்த புலனாய்வு துறை அதிகாரிமுரளி, கோவை சி.ஜி.எஸ்.டி.,யின் முதன்மை கமிஷனர் அலுவலக ஆய்வாளர்மகேந்திரன், கண்காணிப்பாளர் பாட்ரிக் சர்குரு தாஸ் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தென்மண்டல ஊழல் தடுப்பு மற்றும்கண்காணிப்பு பிரிவு இயக்குனர் ஜெனரல் அலுவகத்தை சேர்ந்த கண்காணிப்பாளர் சாந்தி, சென்னைமண்டல ஜி.எஸ்.டி., நுண்ணறிவு பிரிவு இயக்குனர் ஜெனரல் அலுவலகத்தை சேர்ந்த மூத்த நுண்ணறிவு அதிகாரிகோவிந்தன் தேர்வாகிஉள்ளனர்.
இவர்கள் உட்பட, 29 அதிகாரிகளுக்கு, குடியரசு தின விழாவில், ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!