குடியரசு தின விழாவில் 30 சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு போலீஸ் பதக்கம்
புதுடில்லி: புதுடில்லியில், இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில், சி.பி.ஐ., அதிகாரிகள் ௩௦ பேருக்கு, அவர்களது சேவையை பாராட்டி போலீஸ் பதக்கம் வழங்கப்படுகிறது.
இன்று நாடு முழுதும் ௭௪வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. புதுடில்லியில் நடைபெறும் இந்த விழாவின் போது, சிறந்த சேவை புரிந்த சி.பி.ஐ., அதிகாரிகள் ௩௦ பேருக்கு, போலீஸ் பதக்கம் வழங்கப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
குடியரசு தின விழாவில், ௩௦ சி.பி.ஐ., அதிகாரிகளில் ஆறு பேருக்கு, சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் வழங்கப்படுகிறது. மற்ற ௨௪ பேருக்கு, சிறந்த சேவைக்கான போலீஸ் பதக்கம் வழங்கப்படுகிறது. இவர்களில், ௧௯௯௭ம் ஆண்டு அணியைச் சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரியான இணை இயக்குனர் விப்லப் குமார் சவுத்திரி, சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் பெறுகிறார். இவர், 'ஆன்லைன்' வாயிலாக குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரிக்கிறார்.
இதேபோல், இவரது அணியைச் சேர்ந்த மற்றொரு இணை இயக்குனர் ஷரத் அகர்வாலும், சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் பெறுகிறார். இவர், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஊழல் வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகளை கண்காணிக்கிறார். இவர்கள் போக மேலும் நால்வர் இந்த விருதை பெறுகின்றனர்.
டி.ஐ.ஜி., ககன்தீப் கம்பீர், சிறந்த சேவைக்கான போலீஸ் பதக்கத்தை பெறுகிறார். இவர், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு, விஜய் மல்லையா வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளை கண்காணித்து வருகிறார். இந்த விருது, இவர் உட்பட ௨௪ பேருக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!