ADVERTISEMENT
சென்னை: 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் கவர்னர் ரவி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். சட்டசபையில் நடந்த நிகழ்வுகளுக்கு பிறகு, கவர்னரும், முதல்வரும் குடியரசு தின விழாவில் தான், 17 நாட்களுக்கு பிறகு சந்தித்தனர். அப்போது, கவர்னரை, சிரித்த முகத்துடன் பூங்கொத்து கொடுத்து ஸ்டாலின் வரவேற்றார்.

சட்டசபையின் 2023ம் ஆண்டிற்கான முதல் கூட்டம் சமீபத்தில் கவர்னர் உரையுடன் துவங்கியது. அப்போது, தமிழக அரசு தயாரித்து வழங்கிய அறிக்கையில் இருந்த சில வார்த்தைகளை கவர்னர் ரவி வாசிக்கவில்லை. சில வார்த்தைகளை தானாக சேர்த்து வாசித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், கவர்னர் வாசித்த உரையை அவைக்குறிப்பில் ஏற்றக்கூடாது என தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது சட்டசபையில் இருந்த கவர்னர் ரவி வெளிநடப்பு செய்தார்.
கவர்னரின் செயலுக்கு திமுக., மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், கவர்னர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் மறறும் அமைச்சர்கள் பங்கேற்கவில்லை.
குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேநீர் விருந்துக்கு வருமாறு முதல்வர் ஸ்டாலினை நேற்று கவர்னர் தொலைபேசியில் அழைத்து அழைப்பு விடுத்தார். அதில், ஸ்டாலின் பங்கேற்பாரா என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அதேநேரத்தில் கூட்டணி கட்சிகள் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன. சட்டசபை நிகழ்வுகளுக்கு பிறகு ரவியும், ஸ்டாலினும் கடந்த 17 நாட்களாக நேருக்கு நேர் சந்திக்கவில்லை.
இந்நிலையில், இன்று சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் குடியரசு தின விழா நடந்தது. விழா மரபுப்படி, ஸ்டாலின் முதலில் அங்கு வந்தார் பிறகு வந்த கவர்னர் ரவியை, சிரித்த முகத்துடன் கைகுலுக்கி ஸ்டாலின் வரவேற்றார். பதிலுக்கு, கவர்னரும் வணக்கம் கூறி வரவேற்பை ஏற்று கொண்டார்.

இதனை தொடர்ந்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்து கவர்னர் ரவி மரியாதை செலுத்தினார்.அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.

தொடர்ந்து முப்படை வீரர்கள், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ரவி ஏற்று கொண்டார். விங் கமாண்டர் பிரசாந்த் சர்மா தலைமையில் பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு நடத்தினர். இதன் பிறகு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதனை, கவர்னரும், முதல்வரும் அருகருகே அமர்ந்து பார்வையிட்டனர்.

இதனை தொடர்ந்து தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடந்தது. 'தமிழ்நாடு வாழ்க' என்ற வாசகத்துடன் கூடிய அலங்கார ஊர்தியும் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றது.
வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அண்ணா பதக்கத்தை 5 பேருக்கு கவர்னர் வழங்கினார்.
இந்த விழாவில் கவர்னர் மனைவி, முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்டங்களில்
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், குடியரசு தினத்தை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.
வாசகர் கருத்து (23)
முதல் ரவுண்டு போட்டி முடிந்தது, அடுத்த ரவுண்டுக்கு ஆளுநர் தயாரா?
பொழப்பே சிரிப்பா சிரிக்குது ,என்ன செய்வது ???சிரிச்சுத்தானே ஆகணும் .
கவர்னர் மரியாதையா அடக்கி வாசித்தால் அவருக்குறிய மரியாதை கிடைக்கும்.
வேற வழி .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நாடகம் அன்றோ நடக்குது இந்த சுதந்திர தின திருநாளில் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும்