பசுமை குடியரசு தின விழா
ராமநாதபுரம் :ராமநாதபுரம் மாவட்ட இல்லம் தேடி கல்வி மையம் சார்பில் ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தன்னார்வலர்கள்இணைந்து பசுமை குடியரசு தின விழா கொண்டாடினர்.
திருப்புல்லாணி வட்டார மேற்பார்வையாளர் சேதுபதி தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் ரமேஷ், வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் முருகவேல் முன்னிலை வகித்தனர். தன்னார்வலர் இலக்கியா வரவேற்றார்.
மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் லியோன் வெப்பமயமாதலின் பாதிப்பு, குடியரசு தின சிறப்பு குறித்து பேசினார். மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
சிறு நூலகம் திறக்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகள்நடந்தன. தன்னார்வலர்கள் இந்துமதி, சூர்ய பிரபா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!