குளம் போல தேங்கிய கழிவுநீரால் அரசு குழந்தை இல்லம் நாறுதுங்க
பட்டணம்காத்தான் : ராமநாதபுரம் பட்டணம்காத்தான் 'டி பிளாக்' ரோட்டில் உள்ள அரசு குழந்தைகள் இல்லம் வளாகத்தில் ஒரு வாரமாக கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளதால் துர்நாற்றம், கொசுத்தொல்லையால் அலுவலர்கள், குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.
டி பிளாக் ரோட்டில் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம் செயல்படுகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் தங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட வளாகத்தில்கழிவுநீர் வெளியே செல்லும் வழியில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒரு வாரமாக தேங்கியுள்ள கழிவு நீரால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கொசுத்தொல்லை, துர்நாற்றத்தினால் அலுவலர்கள், குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரம் சேதுபதி லயன்ஸ் சங்க நிர்வாகி ராமநாதன் கூறுகையில், சங்கம் சார்பில், அரசு குழந்தைகள்இல்லத்தில் வாரந்தோறும் உதவி செய்கிறோம். இவ்வளாகத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
குழந்தைகள் நோய் தொற்றால் பாதிக்கும் அபாயம் உள்ளதால் உடனடியாக கழிவு நீரை அகற்றி சுத்தம் செய்ய கலெக்டர் உத்தரவிட வேண்டும், என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!