தி.மு.க., என்றாலே ரவுடிகள் கட்சி தான்: எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் காட்டம்
கோவை: ''தி.மு.க., என்றாலே ரவுடிகள் கட்சிதான். கல் வீசிய அமைச்சரின் செயலை, மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்,'' என, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறினார்.
![Latest Tamil News]()
கோவை, குறிச்சி பொங்காளியம்மன் கோவிலில், 'சிறுதுளி' அமைப்பு சார்பில் அம்மனுக்கு நன்றி கூறும் பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பங்கேற்றார்.
அப்போது அவர் அளித்த பேட்டி:
கோவை மாவட்டம் மட்டுமின்றி அருகேயுள்ள மாவட்டங்களும், நொய்யல் நதியால் காலம், காலமாக பயனடைந்து வருகின்றன. இன்று நொய்யலாறு கழிவுநீர் அதிகமாக கலந்து வழியெல்லாம் மாசடைந்து, நிரம்பியுள்ள அனைத்து குளங்களும் மாசடைந்துள்ளன.
நொய்யல் பாதுகாப்பிற்காக முந்தைய அரசால் ஒதுக்கப்பட்ட நிதி, மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, சட்டசபையில் விபரம் கேட்பதுடன், பணியை தீவிரப்படுத்த குரல் கொடுப்பேன்.
![Latest Tamil News]()
தி.மு.க., என்றாலே ரவுடிகள் கட்சி தான். அமைச்சர் நாசரின் செயலில் ஆச்சரியமில்லை. மக்கள் ஓட்டு போட்டு அமைச்சரானாலும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளமாட்டார்கள்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கட்சியின் நிலைப்பாட்டை, மாநில தலைவர் அண்ணாமலை தெரிவிப்பார்.
இவ்வாறு, அவர் கூறினார்.

வாசகர் கருத்து (12)
தி மு க என்றால் படித்தவர்கள் ,அறிவாளிகள்
பாஜக என்றாலே மோசம்
100% கரக்ட்,..
அப்போ பிஜேபி என்றாலே ஜல்ஸா பார்ட்டியா.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
திமுக என்றாலே 21 ஆம் பக்க ஆட்கள்