மேயர் இந்திராணி அறிவித்தார்.
மேயர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கமிஷனர் சிம்ரன்ஜித்சிங், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். தமிழக அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்த மேயர் பேசியதாவது:
மாநகராட்சியில் தேவையான இடங்களில் சிறப்புநிதி மூலம் தார்ச்சாலை, பேவர் பிளாக் அமைப்பது உள்ளிட்ட பணிகள் விரைவில் நடக்கவுள்ளன. இதற்காக ரூ.55 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.15 கோடிக்கான பொதுப் பணிகளுக்கு
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சைக்கிள் ஸ்டாண்ட் உள்ளிட்ட வாகன காப்பகங்கள் ஏலம் விடப்படவுள்ளன.
மாநகராட்சி வருவாயை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மண்டலம் வாரியாக 'டாப் 10' நிறுவனங்களில் இருந்து ரூ.100 கோடி பாக்கியை வசூலிக்க அலுவலர்கள் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.
திட்டங்கள் நடக்கவில்லை
வாசுகி (மண்டலம் 1 தலைவர்): மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் மந்தகதியில் நடக்கின்றன.
ஆனையூர் பகுதியில் இதுவரை ஒரு திட்டம் கூட நிறைவடையவில்லை. துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. 36, 37வது
வார்டுகளில் குடிநீர் பிரச்னை உள்ளது. குப்பை வண்டிகள் பழுதாகி உள்ளன.
முதல்வர் நிகழ்ச்சி சவாலாகிறது
சரவணபுவனேஸ்வரி (மண்டலம் 2 தலைவர்): வடக்கு மண்டலத்தில் மொத்தமே ஒரு சுகாதார ஆய்வாளர் தான் உள்ளார். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், சர்க்கியூட் ஹவுஸ் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உள்ளன. தளவாடப் பொருட்கள் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் வருகையின் போது சவாலாக உள்ளது. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் ஆர்.ஓ., பிளான்ட், பாலுாட்டும் மையம் செயல்படவில்லை, என்றார்.
இவர்கள் உட்பட கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் நிலவும் குறைகளுக்கு தீர்வு அளிக்கவும், நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்கள் செயல்படுத்த வலியுறுத்தினர். மேயர், கமிஷனர் பதில் அளித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!