ADVERTISEMENT
சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு, கவர்னர் ஆர்என் ரவி ஆற்றிய உரை: நாட்டு இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது. தாய் திருநாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரத்தம், வியர்வையால், வீரர்கள் பாதுகாக்கின்றனர். வஉசி, பாரதியார், வேலுநாச்சியார், மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்துவோம். ருக்மணி லட்சுமிபதி, குயிலி, அஞ்சலை அம்மாள் ஆகிய தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபடுகிறது. இலங்கை தமிழர் நலனுக்காக மத்திய அரசு உதவுகிறது. அங்கு வசிக்கும் தமிழர்களுக்காக வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் நலனுக்கு தமிழக அரசும் உதவுகிறது. இவ்வாறு கவர்னர் பேசினார்.

கவர்னர் தனது உரையை, வணக்கம், 74வது குடியரசு தின விழாவில் தமிழகத்தில் வசிக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழ் வாழ் மக்களுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என தமிழில் வாழ்த்து கூறி தனது உரையை துவக்கினார்.
வாசகர் கருத்து (4)
இந்தியை இங்கே வளர்க்க பாடுபடுகிறதோ அதே போல் தமிழையும்.பிற மொழிகளையும் மற்ற மாநிலங்களில் வளர்க பாடுபட வேண்டும்.
தமிழ் வளர்ச்சிக்கு மத்திய அரசு பாடுபடுகிறது என்று சொன்னால் உடனே தமிழை இந்தியா ஆட்சி மொழியாக அறிவிக்க முடியுமா
இவர்களை எல்லாம் இங்குள்ளவனுக்கு யார் என்றே தெரியாது .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
தமிழ் மொழி வளர்ச்சிக்கு வெறும் பத்து கோடி நிதி ஒதுக்கி விட்டு சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஐநூறு கோடி நிதி ஒதுக்கி உள்ளார்களா