Load Image
Advertisement

சிறந்த போலீஸ் ஸ்டேசன்கள் விருது: திருப்பூர் வடக்கு முதலிடம்


சென்னை: சிறந்த போலீஸ் ஸ்டேசன்களுக்கான முதல்வர் விருதுக்கு போலீஸ் ஸ்டேசன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முதல் பரிசுக்கு கோவை வடக்கு போலீஸ் ஸ்டேசன் தேர்வாகியுள்ளது. இதற்கு அடுத்த இடங்களில், திருச்சி கோட்டை , திண்டுக்கல் வட்ட போலீஸ் ஸ்டேசன் தேர்வாகியது. இதற்கான விருதை, குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு காந்தியடிகள் போலீஸ் பதக்கங்களை பெறுபவர்களின் பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி, தஞ்சை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஜெயமோகன், சேலம் நுண்ணறிவுப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சகாதேவன், விழுப்புரம் நுண்ணறிவுப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் இனாயத் பாஷா, செங்கல்பட்டு அயல்பணி நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் சிவனேசன் ஆகியோருக்கு காந்தியடிகள் பதக்கத்தை ஸ்டாலின் வழங்கினார்.

5 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளது வீர தீர செயலுக்கான விருதை, தலைமை காவலர் சரவணன், வேலூரை சேர்ந்த செவலியர் ஜெயக்குமார் பொன்னரசு, தூத்துக்குடியை சேர்ந்த அந்தோணியம்மாள், கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணன், தஞ்சாவூரை சேர்ந்த செல்வம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

வேளாண்துறை சிறப்பு விருதுக்கு புதுக்கோட்டையை சேர்ந்த வசந்தாவுக்கும், கோவையை சேர்ந்த இனாயத்துல்வுக்கு மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது வழங்கப்பட்டது.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement