ADVERTISEMENT
சென்னை: குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி, மாநிலம் முழுதும் போலீசார் உஷார் நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.
நாட்டின் 74வது குடியரசு தின கொண்டாட்டத்தை ஒட்டி, தமிழகத்தின் முக்கிய இடங்களான சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், 24 மணி நேரமும் கண்காணிக்கக் கூடிய வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர் குழு, சிறப்பு படையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மாநிலம் முழுதும், ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்ட உள்ளது.
ரயில்வே டி.ஐ.ஜி., விஜயகுமார் கூறியதாவது:
ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீசார் என, 2,500 க்கும் மேற்பட்டோர், தொடர் கண்காணிப்பு பணியில் உள்ளனர்.
![Latest Tamil News]()
ரயில் பாதை பகுதிகளில் ரோந்து பணிகளையும், கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையில் இருந்து, கண்காணிப்பையும் தீவிரப்படுத்தி இருக்கிறோம். ரயில் நிலையத்திற்குள் வரக்கூடிய பயணியரின் உடைமைகள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பின் உள்ளே செல்ல அனுமதிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
குடியரசு தின விழா ஆனந்தமெல்லாம் போய், எங்கே பாத்தாலும் உஷார், போலீஸ் சோதனைன்னு கொண்டாந்துட்டாங்க.