திருப்பூர் : 'நம் நாட்டுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டவரை தடுக்க, சி.ஏ.ஏ., சட்டம் கட்டாயம் அமல்படுத்த வேண்டும்' என ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வங்கதேச நபர்கள் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். பல வழியிலும், ஊடுருவல் நடக்கிறது என, தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அது ஒரு பொய் குற்றச்சாட்டு என்றும் கூறுகிறது.

மேலும், அவர் பெங்களூரு சென்று மேற்கு வங்க முகவரியில் ஆதார், பாஸ்போர்ட் பெற்றுள்ளார். அரபு நாடும் சென்றுள்ளார். மீண்டும் திருப்பூருக்கு வேலைக்கு வர போலி பாஸ்போர்ட்டில் வந்தபோது போலீசிடம் பிடிபட்டார்.
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில், வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். இது போன்று மீண்டும் நிகழாமல் தவிர்க்க, மத்திய அரசு சி.ஏ.ஏ., சட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். தமிழகத்தில் தங்கியுள்ள வங்கதேச ஊடுருவல்காரர்களை கண்டறிந்து நாடு கடத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (8)
கண் கேட்ட பின் சூரிய நமஸ்காரம். ஆனாலும் better late than ever ஆக்ரோஷமாக ஊடுருவலை தடுப்பது மட்டுமல்ல ஊடுருவி விட்டவர்களைத் திருப்பி அனுப்புவதில் அக்கறை காட்ட வேண்டும். சட்ட விரோதமாக வந்தவர்களை வீட்டில் வைத்திருந்தாலும் வாடகைக்கு வீட்டை கொடுத்தோர் வேலைக்கு அமர்த்தியவர்கள் மற்றும் போலி ஆவணங்களை தயார் பண்ணிக்க கொடுத்தோரார் அனைவருக்கும் இப்பொழுது இருப்பதை விட கடும் அபராதம் தண்டனை கொடுக்க சட்டம் இயற்ற வேண்டும். உள்ளூர் மக்கள் இவர்களை வேலைக்கு வைத்திருக்கும் வர்த்தக நிலையங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
கணக்கற்ற குழந்தைகளையும் பெற்று தள்ளி அவைகள் தினவெடுத்து வளர்ந்தும் விட்டன. ஜம்மு காஷ்மீர் மட்டுமல்ல உத்தரகண்ட் , ஆந்திர தெலங்கானா , தமிழ் நாடு , கேரளா , கர்நாடகா , மஹாராஷ்டிரா என எங்கும் ஆக்கிரமித்துள்ளனர் .
"கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்''' எக்கச்சக்கமாக இந்தியா முழுவதும் ரோஹிங்கியா மற்றும் அண்டைய பங்களாதேஷின் முஸ்லிம்களின் ஊடுருவல் மட்டுமல்ல செகுலர் அரசாங்கமே அவர்களுக்கு நவீன வசதிகளுடன் இலவசமாக வீடுகளும் கட்டிக்கொடுத்திருக்கின்றன. பாகிஸ்தானிலிருந்து வந்த ஹிந்து அகதிகளுக்கு கிஞ்சித்தும் உதவி அளிக்கவில்லை. பலரும் மனம் வெதும்பி பாகிஸ்தானுக்கே திரும்பி விட்டனர். ஜம்மு காஷ்மீர் மட்டுமல்ல , தமிழ் நாடு முழுவதும் , ஆந்திர தெலங்கானா , கேரளா , டெல்லி , கர்நாடகா , மும்பை , உத்தரகண்ட் என எங்கும் செட்டில் ஆகி உள்ளனர். வத வத என கணக்கற்ற குழந்தைகளை பெற்றெடுத்து அவைகள் நன்கு தினவெடுத்து வளர்ந்தும் விட்டன.
ஊடுருவல் இந்துக்களுக்கு குடியுரிமை கொடுக்கும் CAA வை கொண்டுவந்தால் எப்படி ஊடுருவலை தடுக்க முடியும்
மாம்ஸ் நீ தெளிவா பேசுறங்கிற நெனப்புல சேம் சைடு கோல் போடுற.. அதாவது மைனாரிட்டி இந்துக்கள் அங்க அதாவது பாகிஸ்தான்ல நடக்குற அட்டூழியம் பொருக்க முடியாம தாயகம் வரும்போது அவர்களை அரவணைப்பது ஊடுருவல் அல்ல.. நீனும் உனது கும்பலும் இந்தியாவுல படு பயங்கரமான தொல்லைகளை அனுபவிக்கிறதா நெனைக்கிறேன்.. அதனால நீங்க இந்தியாவுக்கு போட்டியா பதிலடியா உங்களை போன்ற பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பாகிஸ்தான்ல குடி உரிமை கொடுக்க சொல்லுங்க. பழிக்கு பழி. எப்படி நல்ல ஐடியா இல்ல. நீங்க அங்க ஊடுருவிரலாம்
அணைத்து இந்தியருக்கும் வேண்டுகோள். No Indian No Business. ஊடுருவலுடன் சம்பந்தப்பட்ட அணைத்து வர்த்தகங்களையும் புறக்கணியுங்கள்.