ADVERTISEMENT
ராமேஸ்வரம், : ராமேஸ்வரம் கோயில் நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு வசதி என்ற பெயரில் ஆகம விதிகளை மீறி பிரகாரத்தில் தடுப்பு வேலிகள் அமைத்து பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பதில் அக்கறை காட்டுகின்றனர். ஆனால் பக்தர்களுக்கு எவ்வித வசதியும் செய்யாமல் தரிசனம் செய்யும்இடத்தில் நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.
இச்சூழலில் தினமும் கோயிலில் சுவாமி தரிசனம்செய்ய வரும் உள்ளூர் பக்தர்கள் தடுப்பு வேலிகளால் தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். கோயில் அதிகாரியின் அத்துமீறலை கண்டித்து நேற்று அக்னி தீர்த்த கடற்கரையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராமேஸ்வரம் தாலுகா செயலாளர் சிவா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், தாலுகா குழு அசோக், மணிகண்டன்,வக்கீல் மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அறநிலையத்துறை அலட்சியத்துறைதான் .... அதில் சந்தேகமில்லை. ... ஆனால் பக்தர்கள் வசதிகள் பற்றி கம்யூனிஸ்ட்கள் கவலைப் படுகிறார்கள் .... ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம் !