Load Image
Advertisement

அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி விட்டது! கல் எறிந்த அமைச்சருக்கு மக்கள் கண்டனம்

Tamil News
ADVERTISEMENT

கோவை: பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொண்டர் மீது கல் எறிந்த செயல் குறித்து, பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.

திருவள்ளூரில் நேற்று முன்தினம் பால்வளத் துறை அமைச்சர் நாசர், ஆத்திரத்துடன் தொண்டர் மீது கல் வீசும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

அமைச்சர் என்ற உணர்வு கூட இல்லாமல், பொது வெளியில், அதிகாரிகள், கட்சியினர் முன்னிலையில், கல்லை எடுத்து, தொண்டர் மீது வீசியது, கடும் கண்டனத்தை கிளப்பி உள்ளது.

அமைச்சரின் தரம் கெட்ட செயல் குறித்து, பொதுமக்கள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
Latest Tamil News

நினைத்தாலே அச்சம்!அஸ்வந்த், கல்லூரி மாணவர், சூலுார்: அமைச்சர் நாசரின் செயல் கண்டனத்துக்கு உரியது. மக்கள் பிரதிநிதிகளில் முன் மாதிரியாக இருக்க வேண்டியவர்கள், பொது இடத்தில் இதுபோன்று தரம் தாழ்ந்து நடந்து கொண்டது வெட்கக்கேடானது.

இந்த சம்பவம் தி.மு.க.,வுக்கு மேலும் கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளது. சொந்த கட்சி தொண்டருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பொதுமக்கள் சிக்கினால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்தாலே அச்சமாக உள்ளது. முதல்வர், அந்த அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைகுனிவை ஏற்படுத்தும்!சகாதேவன், சுய தொழில், பெரியநாயக்கன்பாளையம், கோவை: நம் உயர்வுக்கு ஏற்ற வகையில், நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அமைச்சர் மக்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும். அவருடைய இது போன்ற செயல் மனதுக்கு வருத்தம் அளிக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தும்.

பதவி பறிக்க வேண்டும்!கே.கோபால்சாமி, விவசாயி, கதவுகரை, அன்னுார்: தமிழக அரசின் அமைச்சர்களில் நேரு, பொன்முடி, நாசர் என பலரும், மக்களையும், கட்சி தொண்டர்களையும், ஒருமையில் பேசி, தாக்கி, அவமரியாதைப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.

சுயமரியாதை உள்ளவர்கள் இதை தாங்கி கொள்ள மாட்டார்கள். உண்மையிலேயே முதல்வர் ஸ்டாலின் இந்த நடவடிக்கைகளை விரும்பாவிட்டால், அமைச்சர் நாசரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

ஆணவம், அலட்சியம்!வி.அமுதா, குடும்ப தலைவி, சொக்கம்பாளையம், கோவை மாவட்டம்: பதவி கிடைக்காவிட்டாலும், விசுவாசத்திற்காக கட்சி வேலை பார்த்து வரும் தொண்டர்களை அமைச்சர்கள் இழிவுபடுத்தி, ஒருமையில் பேசுவது, தமிழக மக்களை தலை குனிய செய்கிறது. ஓரிருவர் மட்டுமல்லாமல் தமிழக அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் ஆணவத்துடன் பேசுவதும், அலட்சியமாக பதில் அளிப்பதும், இவர்களை தேர்ந்தெடுத்த மக்களை வெட்கப்பட வைத்துள்ளது. தமிழக முதல்வர் இதை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை.
Latest Tamil News

ஆட்சிக்கு களங்கம்!-வெள்ளிங்கிரி, வாழைக்காய் மண்டி உரிமையாளர், மேட்டுப்பாளையம்: அமைச்சர் நாசர் கல் எறிந்த சம்பவம், அனைவர் மத்தியிலும் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. அமைச்சராக இருப்பவர் இது மாதிரி செய்வது அழகல்ல. அமைச்சரின் கல் வீச்சு, ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும். நல்ல நிர்வாகம் செய்வது என்றால், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மற்றொருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும்.

பதவிக்கு தகுதி இல்லாதவர்செல்வராஜ், லாரி உரிமையாளர், மேட்டுப்பாளையம்: கட்சி தொண்டர் மீது கல் வீசிய அமைச்சர் நாசர், அமைச்சருக்கு தகுதியானவர் இல்லை. இவரது இச்செயல் அமைச்சர் பதவிக்கு அழகில்லை. எனவே அமைச்சர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில், ஆட்சியின் மீது நம்பிக்கை கிடைக்கும்.

'திராவிட மாடல்' இது தானோ!நடராஜன், காளப்பட்டி, கோவை: அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் இப்படி நடந்து கொண்டது வேடிக்கையாகவும் வினோதமாகவும் உள்ளது. இப்படி எல்லாம் விளையாடுவது தி.மு.க., அமைச்சர்களுக்கு இப்போது கைவந்த கலையாக மாறி வருகிறது. கையை ஓங்குவது, வாயால் திட்டுவது, மக்களை அவமரியாதை செய்வது போன்றவை தான், 'திராவிட மாடல்' ஆட்சியா? எதிலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு வேண்டும். -

மக்களுக்கு என்ன பாதுகாப்பு?துளசி அம்மாள் ராஜு, கோவை: ஒரு அமைச்சரே இப்படி நடந்து கொண்டால், தொண்டர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நினைத்தால் அச்சமாக இருக்கிறது. ஒவ்வொரு அமைச்சரும் ஏதோ ஒரு வகையில் மக்களிடம் கெட்டபெயரை வாங்கி கட்டிக் கொள்கிறார்கள். தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில்,மக்களுக்கு எந்த வகையில் பாதுகாப்பு இருக்கும். மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் அமைச்சரே, இப்படி நடந்து கொண்டால் மற்றவர்களும் இவர்களை பார்த்து கல் வீச மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? பொது இடங்களிலும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அமைச்சரின் செயல் சரியல்லசக்திவேல், நியூடவுன், போத்தனுார், கோவை: அமைச்சராக இருப்பவர் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். தொண்டர்களின் உழைப்பில்தான் இவர் பதவிக்கு வந்துள்ளார். அதை மறந்து பொது இடத்தில் இதுபோல் நடப்பது சரியல்ல. பதவி ஏற்கும்போதே மக்களை பாதுகாப்பேன் என கூறுகின்றனர். இச்செயல் இவருக்கு மட்டுமல்ல; அரசுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது.

news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (27)

 • பேசும் தமிழன் -

  உபி ஸ் நிலமை தான் அந்தோ பரிதாபம் ....வாங்கும் 200 ரூபாய் , குவாட்டர் மற்றும் ஓசி பிரியாணிக்கு ....கல்லடி பட வேண்டும் போல் தெரிகிறது

 • g.s,rajan - chennai ,இந்தியா

  அமைச்சர் ஒரு வேளை சாத்தானைக் கல்லால் அடிக்கிறாரோ ???இருக்கலாம் .

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  திமுக அரசுக்கு என்றைக்கு நல்ல பெயர் இருந்தது, இப்பொழுது அது கெட்டுபோவதற்கு? ஆனால் ஒன்று, திமுகவின் அழிவு, திமுகவில் உள்ள நாசர் போன்ற ஒருசில கேடுகெட்ட தலைவர்களால்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஏற்கனவே ஏதோ நல்ல பெயர் இருந்து இப்பொழுது கெட்டுப்போய் விட்டதாக உருட்டுவது ஓவரானது. அணில் போன்றோர் ஏறாளமான ஊழல் வழக்குகளை எதிர்நோக்குகிறார்கள்...

 • nv -

  அடிப்படையில் தரம் இல்லாதா பண்பு இல்லாத ஆட்களை அமைச்சர் ஆக்கினால் இப்படி தலை குனிவு உறுதி. தமிழ் மக்கள் யோசிக்க வேண்டும். இனியாவது இந்த மாதிரி தரம் தாழ்ந்த ஆட்களை தேர்வு செய்ய கூடாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement