ADVERTISEMENT
சென்னை: தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில், நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதியில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது, அடுத்த மூன்று நாட்களில் மேற்கு, வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.
இதன் காரணமாக, இந்திய பெருங்கடல், தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில், நாளை வரை மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில், வரும், 28ம் தேதி, மணிக்கு,55 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும்.
வரும், 29ம் தேதி இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். எனவே, மேற்கண்ட பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்லவேண்டாம்.
தமிழகம், புதுச்சேரியில், இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவும். மழையை பொறுத்தவரை, வரும், 28, 29ம் தேதிகளில், தமிழக கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, வால்பாறை மற்றும் பந்தலுாரில், 4 செ.மீ., மழை பதிவானது.
நீலகிரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கோவை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில், சில இடங்களில் லேசான மழை பெய்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!