பி.எஸ்.ஜி., எம்.ஆர்.சி., இடையே மாவட்ட கால்பந்து லீக் போட்டி
கோவை: மாவட்ட அளவிலான 'ஏ' டிவிஷன் கால்பந்து லீக் போட்டியில், பி.எஸ்.ஜி., எம்.ஆர்.சி., அணிகள் இடையேயான போட்டி 'டிராவில்' முடிந்தது.
கோவை மாவட்ட கால்பந்து சங்கம் மற்றும் புளூபேண்ட் ஸ்போர்ட்ஸ் சார்பில், மாவட்ட அளவிலான முதல் டிவிஷன் கால்பந்து போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
இதில், பி.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் எம்.ஆர்.சி., அணிகள் போட்டியிட்டன. இப்போட்டியின் முதல் பாதியில், 25வது நிமிடத்தில் எம்.ஆர்.சி., அணி ஒரு கோல் அடித்து, முதல் பாதி நேர முடிவில், 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில், 62வது நிமிடத்தில் பி.எஸ்.ஜி., அணி ஒரு கோல் அடித்து சமன் செய்தது. ஆட்ட நேர முடிவில், 1 - 1 என்ற கோல் கணக்கில், போட்டி டிராவில் முடிந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!