தென்னை விவசாயிகள் பயன்பெற புதிய திட்டம்
அன்னூர்: நாம் இயக்கத்தின் சார்பில், ஆலோசனைக் கூட்டம் அன்னூரில் நடந்தது.
கூட்டத்தில் அமைப்பின் மாநிலத் தலைவர் பிரபு ராஜா பேசுகையில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலுடன், தென்னை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நாம் இயக்கம் சார்பில் புதிய திட்டம் துவக்கப்பட உள்ளது.
வருகிற ஏப்ரல் முதல், நாம் இயக்கம் சார்பில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக தேங்காய் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
இதற்காக விவசாய சங்கங்கள், கூட்டு பண்ணைய குழுக்கள், உழவர் குழுக்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட உள்ளோம். விவசாயிகள் இதற்கு ஒத்துழைப்பு அளித்தால், சந்தை விலையை விட கூடுதல் விலை பெறலாம், என்றார். நிகழ்ச்சியில், காரமடை ஸ்ரீ அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் குழு, அன்னூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், நாம் அமைப்பின் மாவட்ட தலைவர் நடராஜன் உட்பட, திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!