கால்நடை சிறப்பு முகாம்
முதுகுளத்துார் :முதுகுளத்துார் ஒன்றியம் ஆத்திகுளம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம், விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஊராட்சி தலைவர் ஆனந்த நாயகி தலைமை வகித்தார். டாக்டர்கள் சுந்தரமூர்த்தி, அகத்தியன் கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்தல், குடற்புழு நீக்கம்,உடல் பரிசோதனை, தாது உப்பு கலவை வழங்குதல், தடுப்பூசி செலுத்தினர்.
முகாமில் 1200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பின், கால்நடை வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊராட்சி துணை தலைவர் சந்திரன், ஆய்வாளர்கள் முனீஸ்வரி, வீரன், ஊராட்சி செயலர் கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!