எண்ணும் எழுத்தும் திட்டம்; ஆசிரியர்களுக்கு இன்று பாராட்டு
கோவை: எண்ணும் எழுத்தும் திட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு, இன்று நடக்கும் குடியரசு தினவிழா நிகழ்ச்சியில், அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
தொடக்க கல்வித்துறையில் கற்றல் இடைவெளி குறைக்க, எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது. மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்த, எழுத்துகள், எண்களை அறிமுகம் செய்தல், வாசிக்க வைத்தல், எளிய கணக்குகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
புதிதாக கொண்டு வரப்பட்ட இத்திட்டத்திற்கு, பாடத்திட்ட வடிவமைப்பு, வீடியோக்கள் உருவாக்குதல், பயிற்சி அளித்தல், ஆசிரியர்களுக்கான கையேடு உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளில், இடைநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இவர்களுக்கு அங்கீகாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுக்க, 813 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், 31 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு, இன்று வ.உ.சி., மைதானத்தில் நடக்கும், குடியரசு தினவிழா நிகழ்ச்சியில், கலெக்டர் சமீரன் பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!