மாநில சைக்கிளிங் போட்டி: கோவை மாவட்டம் அபாரம்
கோவை: பள்ளி கல்வித்துறையின் மாநில அளவிலான சைக்கிளிங் போட்டியில், ஐந்து பதக்கங்கள் வென்று, கோவை மாவட்ட அணி சாதனை படைத்தது.
பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், புதிய விளையாட்டுகளாக சைக்கிளிங், சிலம்பம், கேரம் உள்ளிட்ட போட்டிகள் அரியலுார் மாவட்டத்தில் நடந்தன.
சைக்கிளிங் போட்டியில், கோவை வருவாய் மாவட்டம் சார்பில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆறு மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர் பிரிவு: 14 வயது பிரிவில், ஆஸ்ரம் பள்ளி மாணவர் பிரனேஷ் தங்கம், 17 வயது பிரிவில் நிர்மலா மாதா பள்ளி மாணவர் பேபியன் ராய்ஸ் தங்கம், 19 வயது பிரிவில் சி.எம்.எஸ்., பள்ளியின் மைகேல் ஆன்டனி ஆகியோர் வெள்ளி வென்றனர்.
மாணவியர் பிரிவு : 14 வயது பிரிவில், மேட்டுப்பாளையம் எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி மாணவி சாதனா வெள்ளி, மேட்டுப்பாளையம் எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி மாணவி கார்த்திகாயினி தங்கம் வென்றனர்.
ஆறு பிரிவுகளில் நடத்த போட்டியில், கோவை வருவாய் மாவட்ட அணி ஐந்து பிரிவுகளில் பதக்கம் வென்று சாதனை படைத்தது.
வெற்றி பெற்ற மாணவ மாணவியரை, கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் வாழ்த்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!