தக்காளி வரத்து அதிகரிப்புங் உடுமலையில் விலை குறைவு
உடுமலை: உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலை குறைந்துள்ளது.
உடுமலை நகராட்சி தினசரி சந்தைக்கு, உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். கேரளா மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.
கடந்த வாரம், தக்காளி விற்பனை அதிகரித்த நிலையில், 14 கிலோ கொண்ட பெட்டி, 300 ரூபாய் வரை விலை போனது.
தற்போது, ஒரு பெட்டி, 240 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது.
வியாபாரிகள் கூறுகையில், ' தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், பிற மாவட்டங்களிலும் தக்காளி வரத்து துவங்கியுள்ளதால், உடுமலை சந்தையில், உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே கொள்முதல் செய்து வருகின்றனர். வரத்து அதிகரித்து, விற்பனை குறைவு காரணமாக, தக்காளி விலை குறைந்து வருகிறது. சில்லரை வர்த்தகத்திலும், தக்காளி விலை குறைந்துள்ளது,' என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!