லயன்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா
பரமக்குடி :பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 32ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. லயன்ஸ் கல்வி குழு தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ஆடிட்டர் தினகரன் முன்னிலை வகித்தனர். முதல்வர் சோபனா தேவி வரவேற்றார்.
ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரி ஷேக் முகமது விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். லயன்ஸ் முன்னாள் கவர்னர் ஜெகநாதன், துணை சேர்மன் சவுந்தர நாகேஸ்வரன், லயன்ஸ் சங்க தலைவர் வக்கீல் தினகரன், செயலாளர் மாதவன், பொருளாளர் வேணுகோபால், மண்டல தலைவர் முகமது உமர் உள்ளிட்டோர் பேசினர்.
உடற்கல்வி ஆசிரியர்கள்வளர்மதி, சஞ்சய் துரை ஏற்பாடுகளை செய்துஇருந்தனர். உடற்கல்வி அலுவலர் சரவணகுமார் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!