மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி; கோவை மாணவர்கள் வெரிகுட்
கோவை: தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் சங்கம் சார்பில், மாநில அளவிலான சப் ஜூனியர் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் மற்றும் அனைத்து வயதினருக்கான, மாநில டிராம்போலின் ஜிம்னாஸ்டிக் போட்டி, சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஜிம்னாஸ்டிக் அரங்கில் நடந்தது.
இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு சப் - ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோவை பிரிவில், பயிற்சி பெற்று வரும் மாணவர்கள், கோவை அணி சார்பில் பங்கேற்றனர்.
இதில், சபர்பன் பள்ளி மாணவன் மதிகரன் 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இரண்டு வெண்கலம்; பி.எஸ்.பி.பி., பள்ளி மாணவர் குகனிதன் 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஒரு தங்கம், இரண்டு வெண்கலம் மற்றும் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர் முகமது ஆஜிப் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், ஒரு வெண்கலம் என மொத்தம் ஆறு பதக்கங்கள் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகு குமார் பாராட்டினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!