உள்ளூர் விடுமுறை விட கோரிக்கை
பொள்ளாச்சி: மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவுக்கு, நாளை உள்ளூர் விடுமுறை விட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நகராட்சித்தலைவர் சியாமளா மற்றும் கவுன்சிலர்கள் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ' பொள்ளாச்சி மாரியம்மன், அங்காளம்மன் கோவில் கும்பாபிேஷகம் நாளை நடக்கிறது.
இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்க, நகர பகுதியில் செயல்படும் பள்ளிகள், கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், இதர நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!