ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி
கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், ஐந்து நாட்கள் வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சி வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியில், உழவர்கள், உற்பத்தியாளர் நிறுவனங்கள், பெண்கள், இறுதியாண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள், தொழில்முனைவோர் என அனைவரும் பங்கேற்கலாம்.
வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி, சந்தை வாய்ப்பு, உரிமம் சார்ந்த செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து பயிற்சியும் அளிக்கப்படும்.
பயிற்சி, பிப்., 13 முதல் 17ம் தேதி வரை நடக்கும். பயிற்சி கட்டணம் 11,800 ரூபாய். விபரங்களுக்கு 0422-6611310/ 99949 89417/95004 76626 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!