Load Image
Advertisement

திடக்கழிவு மேலாண்மையில் தனியார் பங்களிப்பால் பாதிப்பு இருக்காது! நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வீடுகள், வணிக நிறுவனங்களின் குப்பை சேகரிக்க தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகராட்சியில், சிறப்புக்கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சித்தலைவர் சியாமளா தலைமை வகித்தார். துணைத்தலைவர் கவுதமன், நகர்நல அலுவலர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர்.

பொள்ளாச்சி நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளவும், குப்பை உருவாகும் இடங்களில் மக்கும், மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து சேகரம் செய்து, மறு சுழற்சி செய்யும் இடத்துக்கு கொண்டு செல்லும் பணி, தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

ஒரு டன்னுக்கு, 5,980 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு செய்யும் நிறுவனத்துக்கு ஆணை வழங்கப்படுகிறது.

இப்பணியை மேற்கொள்ள, பொள்ளாச்சி நகராட்சிக்கு மாதம் ஒன்றுக்கு உத்தேசமாக, 48.51 லட்சம் ரூபாய் என ஆண்டு ஒன்றுக்கு, 582.03 லட்சம் ரூபாய் செலவாகும். இதற்கான அனுமதி வழங்க கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

சையத் யூசப் (ம.தி.மு.க.,): நகரப்பகுதியில் இருந்து குப்பை எவ்வளவு டன் சேகரமாகிறது; தனியார் வசம் ஒப்படைப்பதால் என்ன பயன் என விளக்க வேண்டும்.

ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனத்தினர், வடமாநிலத்தில் இருந்து வருவோருக்கு முன்னுரிமை கொடுத்து ஆட்கள் எடுத்தால், தற்போதுள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்.

எனவே, தற்போதுள்ள தொழிலாளர்கள் பணி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி வாகனங்கள் அவர்களுக்கு வழங்கும் போது, வாடகை வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து விளக்க வேண்டும்.

தலைவர்: தனியாருக்கு ஒப்படைப்பதால், எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நகராட்சிக்கு வருமானம் தான் கிடைக்கும். தற்போதுள்ள துாய்மைப்பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

சையத் யூசப்: தலைவர் கூறுவதை உறுதியாக எடுத்துக்கொள்கிறேன்.

சுகாதார அதிகாரிகள்: நகரப்பகுதியில் இருந்து, 23 டன் குப்பை உற்பத்தியாகிறது. இதை தனியார் நிறுவனம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரித்து ஒப்படைக்க வேண்டும். இதற்காகத்தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விவாதத்துக்கு பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



யாருக்கு என்ன பணி?

வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து குப்பை தரம் பிரித்து பெற, 137 பணியாளர்கள், ஏழு மேற்பார்வையாளர்கள், 22 டிரைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.தற்போது, நகராட்சியில் நிரந்தமாக உள்ள, 69 துாய்மை பணியாளர்கள், பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், ரோடுகளில் மண் அகற்றுதல், செடி அகற்றுதல் உள்ளிட்ட இதர பணிகளை மேற்கொள்வர். மேலும், உரக்கிடங்கில், குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement