மாணவர்களுக்கு பாராட்டு
ஆர்.எஸ்.மங்கலம், :தேவிபட்டினத்தில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான டெம்பில் ஆப் ட்டிரெடிஷனல் ஆர்ட்ஸ் கராத்தே திறனாய்வு போட்டியில் ஆர்.எஸ்.மங்கலம் எக்ஸலண்ட் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி 5ம் வகுப்பு மாணவர் தருண், 2ம் வகுப்பு மாணவர் ரோகித் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை முதல்வர் ஷாஜாத்தி பேகம் தலைமையில், நிறுவனர் ராஜா முகமது, தாளாளர் பவுசுல்லாகான் உட்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!